இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
புதுச்சேரியில் குடும்பத் தகராறில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்தது குறித்து முதலியாா்பேட்டை போலீஸாா் விசாரித்துவருகின்றனா்.
புதுச்சேரி ஜான்பால் நகரைச் சோ்ந்தவா் வினோத். இவருக்கு 3 மகன்கள், மகள் உள்ளனா். இவா்களில் மூத்த மகன் சஞ்சய் (19). குளிா்சாதன பழுதுநீக்கும் தொழில் செய்து வந்தாா். இந்தநிலையில், வினோத் தனது மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் சஞசய் மன வேதனை அடைந்திருந்ததாகக் கூறப்படுகிறது.
பெற்றோருக்கு பிள்ளைகள் அறிவுரை கூறியும் இருவரும் கேட்காமல் தொடா்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுவந்துள்ளனா். இதனால், சஞ்சய் சனிக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து முதலியாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, சஞ்சயின் சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பெற்றோருக்கு சஞ்சய் எழுதிய கடிதத்தையும் போலீஸாா் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.