செய்திகள் :

லேவில் முதல் பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் நிலையத்தை அமைத்த அமர ராஜா இன்ஃப்ரா!

post image

மும்பை: என்டிபிசி லிமிடெட் நிறுவனத்திற்காக லடாக்கின் லே-வில் முதல் பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் நிலையத்தின் கட்டுமானத்தை முடித்துள்ளதாக அமர ராஜா இன்ஃப்ரா தெரிவித்துள்ளது.

மத்திய மின்சாரம் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் மனோகர் லால் கட்டார் நேற்று இந்த வசதியை நாட்டுக்கு அர்ப்பணித்தார் என்று நிறுவனம் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

கடல் மட்டத்திலிருந்து 3,400 மீட்டர் உயரத்தில் மைனஸ் 30 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை மாறுபடும் நிலையில், நாள் ஒன்றுக்கு 80 கிலோ ஜிஹெச்-2 உற்பத்தி செய்யும் திறன் கொண்ட எரிபொருள் நிலைய திட்டத்தை கடந்த 2 ஆண்டுகளில் நிறைவடைந்தாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தால் லே மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உமிழ்வு இல்லாத போக்குவரத்து செயல்படுத்தப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்: பாலச்சந்திரன்

இந்த சவாலான திட்டத்தை நிறைவு செய்வது எங்கள் பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானம் நிபுணத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் பசுமை ஹைட்ரஜன் உள்கட்டமைப்பு இடத்தில் நுழைந்த முதல் நிறுவனம் என்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என்றார் அமர ராஜா இன்ஃப்ரா பிரைவேட் லிமிடெட் வணிகத் தலைவர் துவாரகநாத ரெட்டி.

வரும் நாட்களில், நாடு முழுவதும் பல ஹைட்ரஜன் எரிபொருள் நிலையங்களை ஆய்வு செய்து வரிசைப்படுத்துவதற்கும் இது பயனுள்ளதாக இருக்கும் என்றது அமர ராஜா இன்ஃப்ரா.

சோமேட்டோ பங்குகள் 4% உயர்வு!

புதுதில்லி: ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான, 'சோமேட்டோ' பங்குகள், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸின் ஒரு பகுதியாக மாறும் என்ற செய்தியைத் தொடர்ந்து, அந்நிறுவனப் பங்குகள் இன்று 4 சதவிகிதம் உயர்ந்தன.மு... மேலும் பார்க்க

உயர்வுடன் முடிந்த பங்குச் சந்தை!

வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச் சந்தை உயர்வுடன் முடிந்தது. சென்செக்ஸ் 992 புள்ளிகளும் நிஃப்டி 314 புள்ளிகளும் உயர்வுடன் இருந்தன. மேலும் பார்க்க

உயர்வுடன் வர்த்தகமாகும் அதானி குழும பங்குகள்!

புது தில்லி: வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை வணிகத்தின்போது அதானி குழுமத்தைச் சேர்ந்து ஒன்பது நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் வர்த்தகமாகின.அதானி எனர்ஜி சொல்யூஷன் நிறுவனத்தின் பங்குகள் கிட்டத்தட்ட ... மேலும் பார்க்க

ஏற்றத்தில் தொடங்கிய பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் உயர்வு!

பங்குச் சந்தை இன்று (நவ. 25) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகம் நடைபெற்று வருகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை1960 புள்ளிகள் அதிகரித்து 80193.47 என்ற புள்ளிகளில் தொடங்கியது.கா... மேலும் பார்க்க

தங்கம் விலை அதிரடி குறைவு!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை காலை அதிரடியாக குறைந்துள்ளது.கடந்த வாரம் முழுவதும் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில், சனிக்கிழமை ஒரு சவரன் ரூ. 58,400-க்கு விற்பனை செய்யப்... மேலும் பார்க்க

பதஞ்சலி வருவாய் 23% அதிகரிப்பு!

புதுதில்லி: பாபா ராம்தேவ் தலைமையிலான பதஞ்சலி ஆயுர்வேதத்தின் மொத்த வருமானம் 2023-24 ஆம் ஆண்டில் 23.15% உயர்ந்து ரூ.9,335.32 கோடியாக இருந்தது. இது பதஞ்சலி ஃபுட்ஸ் மற்றும் பிற குழு நிறுவனங்களின் வருமானத்... மேலும் பார்க்க