உ.பி.யில் முஸ்லிம் இளைஞரிடம் அட்டூழியம்: ஆடைகளை அவிழ்த்து துன்புறுத்தல்!
'சோசலிச', 'மதச்சார்பற்ற' சொற்கள் அரசியலமைப்பு முகவுரையில் இருக்கும்: உச்சநீதிமன்றம்
சோசலிச, மதச்சார்பற்ற, ஒருமைப்பாடு ஆகிய சொற்கள் அரசியலமைப்பு முகப்புரையிலிருந்து நீக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் இன்று (நவ. 25) தள்ளுபடி செய்தது.
1976ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சியின்போது அரசியலமைப்பின் முகப்புரையில், சோசலிச, மதச்சார்பற்ற, ஒருமைப்பாடு ஆகிய சொற்களை சேர்ப்பதற்காக சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.
இதனை எதிர்த்து பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி மற்றும் வழக்குரைஞர் அஸ்வினி உபாத்யாய் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்கின் மீதான தீர்ப்பை நவ. 22ஆம் தேதி ஒத்திவைத்தனர்.
இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. அந்தத் தீர்ப்பில், இந்தியாவில் சோசலிசம் என்பது சமத்துவம் பேணும் அரசை குறிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது.