உலக செஸ் சாம்பியன்ஷிப்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!
உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி சுற்றுப்போட்டி(FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குவதை முன்னிட்டு கூகுள் நிறுவனம் சிறப்புக் கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது.
உலகின் பிரபல தேடுபொறி தளமான கூகுள் நிறுவனம் முக்கியஸ்தர்களின் பிறந்தநாள், விடுமுறை நாள்கள், முக்கிய தேதிகள் உள்பட சிறப்புத் தினங்களை அனிமேஷன்கள், ஸ்லைடுஷோக்கள், விடியோக்கள் மற்றும் கேம்கள் உள்பட பல்வேறு வடிவங்களில் வழங்கி மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
இதையும் படிக்க: அதானி விவகாரத்தால் அமளி: முடங்கியது நாடாளுமன்றம்!
சிங்கப்பூரில் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில் உள்ள ஈக்வாரிஸ் உணவகத்தில் இன்று முதல் செஸ் போட்டி தொடங்குகிறது. இன்று தொடங்கும் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி டிசம்பர் 13ஆம் தேதி வரை 14 சுற்றுகளாக இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன.
அந்தவகையில், கூகுள் டூடுல் ரசிகர்களைக் கவரும் வகையில், உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளின் தொடக்கத்தை நினைவூட்டும் வகையில், சதுரங்க கட்டத்தில் வரும் யானை, குதிரை போன்ற வடிவங்களைப் பொருத்தி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.