DMK: கோஷ்டி பூசலால் ப்ளக்ஸ் பேனர் கிழிப்பு; என்ன நடக்கிறது நாகை திமுகவில்?
``ஸ்டிக்கர் ஒட்டினால் தான் மின் கட்டணம் செலுத்த முடியும்'' -EB பெயரில் மோசடி; வீடுகளில் ரூ.50 வசூல்!
'ஸ்டிக்கர் ஒட்டினால் தான் மின் கட்டணம் செலுத்த முடியும்' என்று கூறி சிவகங்கை மாவட்டத்தில் இரண்டு பெண்கள் மக்களை ஏமாற்றி மோசடி செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் வில்லியரேந்தல், வன்னிக்கோட்டை ஆகிய கிராமங்களில் இரண்டு பெண்கள் நேற்று காலை வந்து, 'இந்தப் பச்சை ஸ்டிக்கரில் உள்ள 11 இலக்க நம்பரை உங்கள் மின் இணைப்பு எண்ணோடு இணைத்தால் தான் நீங்கள் ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்த முடியும்' என்றுக் கூறி பச்சை நிற ஸ்டிக்கரை ஒட்டியுள்ளனர். இந்த ஸ்டிக்கருக்கு ரூ.50-ஐ வசூலித்து உள்ளனர்.
ஆனால், இதற்கு முன்னரே நீல நிற ஸ்டிக்கரை அரசாங்கம் இலவசமாக வீடுகளில் ஒட்டியுள்ளது. இதனால், சிலர் உஷாராகி இந்தப் பெண்களிடம் 'காசு கட்ட முடியாது' என்று கூறி ஏமாறாமல் இருந்தாலும், 300-க்கும் மேற்பட்டோர் இந்த மோசடியில் ஏமாந்துள்ளனர்.
ஆன்லைன் மோசடி, அந்த மோசடி, இந்த மோசடி என நடந்துகொண்டிருந்த நிலையில், தற்போது அரசாங்கத்தின் பெயரிலேயே இந்த மோசடியை இந்த இரண்டு பெண்கள் நடத்தி உள்ளனர்.
ரூ.50 என்பது சிறிய தொகையாக இருந்ததாலும் மின் இணைப்பு, ஆன்லைன் கட்டணம் என நம்பிக்கையாக பேசியதால் மக்களுக்கு பெரிதாக இந்தப் பெண்கள் மீது எந்த சந்தேகமும் எழவில்லை.
இப்போது இந்த மாதிரியும் மோசடிகள் முளைக்கத் தொடங்கிவிட்டன. அதனால், உஷார் மக்களே...!