செய்திகள் :

DMK: கோஷ்டி பூசலால் ப்ளக்ஸ் பேனர் கிழிப்பு; என்ன நடக்கிறது நாகை திமுகவில்?

post image

நாகப்பட்டினத்தில் நேற்று (நவம்பர் 25) நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதற்காக நேற்று முன்தினம் இரவே நாகப்பட்டினம் சென்று வேளாங்கண்ணியில் உள்ள சர்ச் வியூ ஹோட்டலில் தங்கினார். தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள் பலரும் நாகப்பட்டினம் மற்றும் நாகூர் பகுதிகளில் உதயநிதியை வரவேற்று ப்ளக்ஸ் பேனர் வைத்தனர். இதேபோல் நாகூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் நாகூர் நகரச் செயலாளரும், நகர் மன்றத் துணைத் தலைவருமான செந்தில்குமார் தரப்பினர் ப்ளக்ஸ் பேனர் வைத்தனர்.

கிழிக்கப்பட்ட ப்ளக்ஸ் பேனர்

அதேபகுதியில் முன்னாள் நகரச் செயலாளர் ராஜா சாஹிப் ஆதரவாளர்களான அறங்காவல் குழுத் தலைவர் நாகரத்தினம், 1வது வார்டு கவுன்சிலர் ரஞ்சித் தரப்பினர், 'எங்களின் சுவாசமே' என உதயநிதியை வரவேற்று ப்ளக்ஸ் வைத்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜா சாஹிப் தரப்பு வைத்த ப்ளக்ஸ் பேனரை மர்ம நபர்கள் கிழித்தனர். இதையடுத்து ராஜா சாஹிப் தரப்பைச் சேர்ந்த ரஞ்சித், தாங்கள் வைத்த ப்ளக்ஸ் பேனரை செந்தில்குமார் தரப்பு கிழித்துவிட்டதாக நாகூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ஆய்வாளர் சிங்காரவேலன், சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்து ப்ளக்ஸ் பேனரை யார் கிழித்தார்கள் என்பதைக் கண்டுபிடிப்போம் எனச் சமாதானம் செய்ததாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் ராஜா சாஹிப் தரப்பினர், செந்தில்குமார் தரப்பு வைத்த ப்ளக்ஸை கிழிக்கப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் வைக்கப்பட்ட அனைத்து ப்ளக்ஸ் பேனர்களும் அகற்றப்பட்டன. இந்த சம்பவம் தி.மு.க வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ப்ளக்ஸ் பேனர்

இதுகுறித்து விபரம் அறிந்த தரப்பில் சிலரிடம் பேசினோம். "நாகூர் நகரச் செயலாளர் செந்தில்குமார் செயலால் தி.மு.க-வினர் பலரும் கடும் அதிருப்தியில் உள்ளனர். நாகூரிலிருந்த பழைய நூலகத்தை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்டினார்கள். இதில் பழைய கட்டடத்தின் பொருட்களை செந்தில்குமார் தன்னுடைய சொந்த பயன்பாட்டுக்கு எடுத்துச் சென்றனர். இதேபோல் பழைய ரிஜிஸ்டர் ஆபிஸ், பழைய பேருந்து நிலையத்தின் நிழற்குடை இடிக்கப்பட்டபோதும் அதன் பொருட்களை எடுத்துச் சென்றார்.

செந்தில்குமார் செய்கின்ற தவறுகளை முன்னாள் நகரச் செயலாளர் ராஜா சாஹிப் தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்தார். இதனால் அவர் தரப்பும், செந்தில்குமார் தரப்பும் தனித் தனி கோஷ்டிகளாகச் செயல்பட்டு வந்தனர். கட்சித் தலைமையிடம் ஒருவரை ஒருவர் புகார் சொல்லி வந்தனர். மாவட்டச் செயலாளர் கெளதமன் இதைக் கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் உதயநிதிக்காக வைத்த ப்ளக்ஸ் பேனரின் ஒரு பாதியை செந்தில்குமார் தரப்பு கிழித்து விட்டதாகச் சொல்லப்படுகிறது. என்ன தான் கோஷ்டி பூசல், மோதல் இருந்தாலும், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி போட்டோ இருக்கிறது என்று கூட யோசிக்காமல் கிழித்திருக்கிறார்கள்.

உதயநிதி ஸ்டாலினுக்காக வைக்கப்பட்ட ப்ளக்ஸ் பேனர்

ராஜா சாஹிப் தரப்பும் இதற்கு எதிரான செயலில் ஈடுபட்டால் உதயநிதி வரும் சமயத்தில் தேவையில்லாத சலசலப்புகளை ஏற்படுத்தும் என்பதால் காவல்துறை அறிவுறுத்தலில் அப்பகுதியிலிருந்த அனைவரது ப்ளக்ஸ் பேனரும் அகற்றப்பட்டன. நாகப்பட்டினம் தி.மு.க-வில் கோஷ்டி பூசலுக்குப் பஞ்சமே இல்லை. தற்போது அமைச்சராக இருக்கும் அமைச்சர் அன்பில் மகேஸ் இதில் உரியக் கவனம் செலுத்தினால் மட்டுமே இது போன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். நாகையில் தி.மு.க-வும் வலுப்பெறும்." என்றனர்.

செந்தில்குமார் தரப்பினரோ, "ப்ளக்ஸ் பேனரைக் கிழித்து கீழ்த்தரமான அரசியல் செய்கிற நபர்கள் நாங்கள் கிடையாது. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் யாராவது கிழித்திருப்பார்கள். காழ்ப்புணர்ச்சியில் நாங்கள் செய்ததாகக் கிளப்பி விடுகின்றனர்" எனக் கூறி வருவதாகச் சொல்லப்படுகிறது.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/MadrasNallaMadras

`கூட்டணி துணையின்றி திமுக ஆட்சி சாத்தியமில்லை' - கே.பாலகிருஷ்ணன் பேச்சும் பின்னணியும்

தி.மு.க தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், வி.சி.க உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன. இந்த சூழலில் சிவகங்கை காங்கிரஸ் எம்.பி கார்த்தி சித்தம்பரம், "சிறுபான்மையின சமுதாயத்தைச் சேர... மேலும் பார்க்க

Shahi Masjid:``ஒடுக்குமுறை, பிரிவினை... உச்ச நீதிமன்றம் நியாயம் வழங்க வேண்டும்"- பிரியாங்கா காந்தி

இந்திய அரசின் பழங்கால நினைவுச் சின்னங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 3 (3), 1904-ன் கீழ், மத்திய பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களின் பட்டியலில் இருக்கிறது ஷாஹி ஜும்மா மஸ்ஜித். இந்த மஸ்ஜித் மீது ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: தேர்தல் புயலில் அடித்துச் செல்லப்பட்ட `ரயில் எஞ்சின்’ - அதிர்ச்சியில் ராஜ் தாக்கரே

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் உத்தவ் தாக்கரேயின் சித்தப்பா மகன் ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தனியாக 120 தொகுதியில் போட்டியிட்டது. ஆரம்பத்தில் பா.ஜ.கவுடன் இணைந்து போட்டியிட முயன்றது. ஆ... மேலும் பார்க்க

Shahi Masjid: ``ஷாஹி மஸ்ஜித் கல்கி அவதாரத்துக்கான இடம்" - வழக்கும் வன்முறையும்! - முழுத் தகவல்

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பால் மாவட்டத்தில் இருக்கிறது ஷாஹி ஜும்மா மஸ்ஹித். இந்த மஸ்ஜித் பழங்கால நினைவுச் சின்னங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 3 (3), 1904-ன் படி தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: மக்களவை தேர்தல் தோல்விக்கு பிறகும் சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வென்றது எப்படி?

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க கூட்டணி எப்போதும் இல்லாத அளவுக்கு அமோக வெற்றி பெற்றுள்ளது. கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நடந்த மக்களவை தேர்தலில் பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மிகப்பெரிய சரி... மேலும் பார்க்க