இவிஎம்-களில் குளறுபடிகள்! மகாராஷ்டிரத்தில் மறு தேர்தல் வேண்டும்: சிவசேனை கோரிக்க...
Murmu: பழங்குடிகள் சந்திப்பு டு பட்டமளிப்பு விழா - 4 நாள் பயணமாக தமிழகம் வரும் குடியரசு தலைவர்
இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு 4 நாள் பயணமாக தமிழகம் வருகைத் தர இருக்கிறார். நாளை மறுநாள் 27 -ம் தேதி டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை மாவட்டம் சூலூர் விமான நிலையத்தை வந்தடைய இருக்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஊட்டியில் உள்ள கவர்னர் மாளிகையான ராஜ்பவன் செல்கிறார். அங்கு தங்கும் குடியரசு தலைவர், 28 -ம் தேதி குன்னூர், வெலிங்டன் முப்படை அதிகாரிகளுக்கான பயிற்சி கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்த இருக்கிறார்.
சாலை மார்க்கமாகவே மீண்டும் ராஜ்பவன் திரும்பும் அவர், 29 தேதி ராஜ்பவனில் தங்கி பழங்குடி மக்கள் பலரையும் சந்தித்து கலந்துரையாட இருக்கிறார். 30 - ம் தேதி ஊட்டியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சூலூர் விமான நிலையம் செல்லும் அவர், அங்கிருந்து விமானம் மூலம் திருச்சி செல்கிறார். திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள 9 - வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க இருக்கிறார். அங்கிருந்து மீண்டும் டெல்லி திரும்புகிறார் .
குடியரசு தலைவர் வருகை குறித்து பேசிய நீலகிரி மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள், " தமிழகத்தில் நடைபெற இருக்கும் இரண்டு முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்க இருக்கிறார். வெலிங்டனில் ராணுவம் தரப்பில் வரவேற்பு ஒத்திகை நடைபெற்று வருகின்றன. ஹெலிபேட் முதல் ராஜ்பவன் வரை முழுமையாக காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கிய இடங்களில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் உள்ளது. காலநிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டால் மாற்று இடத்தில் ஹெலிகாப்டரை தரையிறக்கவும் முன்னேற்பாடுகள் தயாராக உள்ளன" என்றனர்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...