செய்திகள் :

மீண்டும் சென்னை அணியில் ‘சுட்டிக்குழந்தை’ சாம் கரண்!

post image

இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் சாம் கரணை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் ஏலத்தில் எடுத்துள்ளது.

ஐபிஎல் மெகா ஏலம் சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நேற்று (நவம்பர் 24) தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக இன்றும் விறுவிறுப்பாக ஏலம் நடைபெற்று வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரவிச்சந்திரன் அஸ்வின், டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா (ரைட் டூ மேட்ச்), ராகுல் திரிபாதி ஆகியோரை ஏலத்தில் எடுத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக இங்கிலாந்து வீரர் சாம் கரணை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2.40 கோடிக்கு எடுத்துள்ளது.

சாம் கரண் 2022 சீசனைத் தவிர்த்து, 2019 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல்லின் எல்லா சீசனிலும் விளையாடியுள்ளார். அவரது முதல் சீசனில், 9 போட்டிகளில் விளையாடி ஒரு அரைசதம் உள்பட 95 ரன்கள் எடுத்தார். மேலும், 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

2020 சீசனில் சென்னை அணிக்காக 186 ரன்கள் மற்றும் 13 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2021 இல், அவர் 9 போட்டிகளில் விளையாடி 56 ரன்கள் எடுத்ததோடு, 9 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.

சாம் கரண் 2023 ஆம் ஆண்டு ஐபிஎல்லில் பஞ்சாப் அணியால் ரூ.18.5 கோடிக்கு வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புவனேஸ்வர் குமார், ஹேசில்வுட்டை தட்டித் தூக்கிய ஆர்சிபி! மும்பையில் தீபர் சாஹர்!

இந்திய வேகப்பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமாரை ரூ.10.75 கோடிக்கு பெங்களூரு வாங்கியுள்ளது.ஐபிஎல் மெகா ஏலம் சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நேற்று (நவம்பர் 24) தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக இன்றும் விறுவிற... மேலும் பார்க்க

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்தியா மீண்டும் முதலிடம்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய அணி மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்... மேலும் பார்க்க

7 ரன்னில் ஆல்-அவுட் ஆன ஐவரிகோஸ்ட்! டி20 வரலாற்றில் மிக மோசமான ஸ்கோர்!

நைஜீரியாவுக்கு எதிரான போட்டியில் ஐவரிகோஸ்ட் அணி வெறும் 7 ரன்னில் ஆல் அவுட் ஆகி மிக மோசமான சாதனையை படைத்தது.ஐசிசி டி20 உலகக் கோப்பை குவாலிஃபையர் குரூப் சி ஆட்டத்தில் நைஜீரியாவுக்கு எதிரான போட்டியில் மி... மேலும் பார்க்க

விராட் கோலிக்கு நமது ஆதரவு தேவையில்லை, நமக்குதான் அவரது ஆதரவு தேவை: ஜஸ்பிரித் பும்ரா

விராட் கோலிக்கு நமது ஆதரவு தேவையில்லை எனவும் , நமக்குதான் அவரது ஆதரவு தேவை எனவும் இந்திய அணியின் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ... மேலும் பார்க்க

ஏலத்தில் விற்கப்படாமல் போன நட்சத்திர வீரர்கள்!

2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் முக்கியமான நட்சத்திர வீரர்கள் பலர் விற்கப்படாமல் ஏமாற்றமளித்துள்ளனர்.ஐபிஎல் மெகா ஏலம் சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நேற்று (நவம்பர் 24) தொடங்கியது. அதன் தொடர்ச்சிய... மேலும் பார்க்க

வாஷிங்டன் சுந்தரை ஏலத்தில் எடுத்த குஜராத் டைட்டன்ஸ்!

ஐபிஎல் மெகா ஏலத்தில் வாஷிங்டன் சுந்தர் குஜராத் டைட்டன்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.ஐபிஎல் மெகா ஏலம் சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நேற்று (நவம்பர் 24) தொடங்கியது. இந்த ஏலத்தில் இந்திய வீரர்... மேலும் பார்க்க