மனைவிக்கு உங்களைப் பிடிக்கணுமா? இந்த 10 பாயிண்ட்ஸை ஃபாலோ பண்ணுங்க... | காமத்துக்கு மரியாதை - 220
1. தாம்பத்திய உறவில் நிதானமாகச் செயல்படுகிற கணவனை, மனைவிக்கு ரொம்பவே பிடிக்கும். தாம்பத்திய உறவில் நிதானமாக, ஜென்டிலாக ஈடுபடுகிற கணவனை, மனைவிக்கு மிகவும் பிடிக்கும்.
2. உறவின்போது ஆண்கள் பேசுவதற்கு விரும்ப மாட்டார்கள். ஆனால், பெண்கள் அந்த நேரத்தில் கணவன் தன் உடலைப் பாராட்ட வேண்டுமென்று விரும்புவார்கள்.
3. மென்மையுடனும் காதலுடனும் நீண்ட நேரம் முத்தமிடுகிற ஆண்களைப் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.
4. கூந்தலைத் தடவிக்கொடுக்கிற கணவரை மனைவிக்கு மிகவும் பிடிக்கும்.
5. 'நீ எனக்கு முக்கியமானவள்' என்பதை வார்த்தைகளாலோ அல்லது செயல்களாலோ உணரச் செய்கிற கணவர்களும் பெண்களுக்குப் பிடித்தமானவர்களே...
6. திருமணத்துக்குப் பிறகும் தன்னைக் காதலிக்கிற கணவர்களை மனைவிகளுக்கு மிகவும் பிடிக்கும்.
7. ஒரு விருந்தினரை நடத்துவதுபோல, தன்னை மரியாதையாக நடத்துகிற கணவரை, பெண்ணுக்கு மிகவும் பிடிக்கும்.
8. படுக்கையறைக்கு உள்ளே எப்படிக் கொண்டாடுகிறானோ, அதைப்போலவே வெளியேயும் தன்னை அன்பாக நடத்துகிற கணவர்களை மனைவிகளுக்கு மிக மிகப் பிடிக்கும்.
9. காதலிக்கும்போது காதலர்களாக இருக்கிற ஆண்கள், திருமணம் முடிந்தவுடன் மேனேஜர் ஆகி மனைவிக்கு உத்தரவிட ஆரம்பித்து விடுகிறார்கள். இப்படி உத்தரவிடாத கணவர்களைப் பெண்களுக்குப் பிடிக்கும்.
10. உடல் சுத்தம், வாய் சுத்தம், சுத்தமான ஆடைகள், தொப்பையில்லாத உடல் கொண்ட கணவர்களைப் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.
முல்லைப் பெரியாறு அணையைக் கட்டினது பென்னி குயிக்னு நம்ம எல்லாருக்கும் தெரியும். ஆனா அதுக்குப் பின்னாடி இருக்க காரணங்கள் உங்களுக்கு தெரியுமா? பிரிட்டிஷார் ஏன் அந்த அணையைக் கட்டுனாங்க... எப்படி அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தாங்க... ஏன் 999 வருஷத்துக்கு நிலத்தைக் குத்தகைக்கு எடுத்தாங்க... இப்படிப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கான பதில்களையும் வரலாற்றையும் சுவாரஸ்யமாக சொல்லும் நாவல்தான் ஆனந்த விகடனில் வெளியான நீரதிகாரம்.
இப்போது அது விகடன் Play-ல் ஆடியோ புத்தகமாக!
இப்பவே விகடன் App-ஐ இன்ஸ்டால் பண்ணுங்க. நீரதிகாரம் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட ஆடியோ புத்தகங்களை இலவசமா கேட்டு என்ஜாய் பண்ணுங்க!