7 ரன்னில் ஆல்-அவுட் ஆன ஐவரிகோஸ்ட்! டி20 வரலாற்றில் மிக மோசமான ஸ்கோர்!
நைஜீரியாவுக்கு எதிரான போட்டியில் ஐவரிகோஸ்ட் அணி வெறும் 7 ரன்னில் ஆல் அவுட் ஆகி மிக மோசமான சாதனையை படைத்தது.
ஐசிசி டி20 உலகக் கோப்பை குவாலிஃபையர் குரூப் சி ஆட்டத்தில் நைஜீரியாவுக்கு எதிரான போட்டியில் மிகக்குறைந்த ஸ்கோரை பதிவு செய்து மோசமான மைல்கல்லை எட்டியுள்ளது ஐவரி கோஸ்ட் அணி.
விராட் கோலிக்கு நமது ஆதரவு தேவையில்லை, நமக்குதான் அவரது ஆதரவு தேவை: ஜஸ்பிரித் பும்ரா
முதலில் பேட்டிங் செய்த நைஜீரியா அணி 4 விக்கெட்டுக்கு 271 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஐவரிகோஸ்ட் வெறும் 7 ரன்களில் சுருண்டது. நைஜீரியா அணியின் சலீம் சாலு 112 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறினார். நைஜீரியா அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்தது.
அடுத்து 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய 7.3 ஓவர்களில் 7 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் அவுட்டாரா முகமது 4 ரன்கள் எடுத்ததே அந்த அணியில் அதிகபட்சமாகும். அவரைத்தவிர்த்து மற்றவர்களில் 3 பேர் ஒரு ரன்னிலும், 6 பேர் டக் அவுட்டாகியும் வெளியேறினார்.
ஐபிஎல் ஏலத்தில் விற்கப்படாமல் போன நட்சத்திர வீரர்கள்!
இதன் மூலம் நைஜீரியா 264 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது டி20 வரலாற்றில் மூன்றாவது மிகப் பெரிய வெற்றி வித்தியாசம் ஆகும். மங்கோலியாவுக்கு எதிரான போட்டியில் நேபாளம் 273 ரன்கள் வித்தியாசத்திலும், ஜிம்பாப்வே அணி 290 ரன்கள் வித்தியாசத்தில் காம்பியாவையும் வீழ்த்தியுள்ளது கவனிக்கத்தக்கது.
இதற்கு முன்னதாக, இரு அணிகள் 10 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளன. மங்கோலியா - சிங்கப்பூர், ஐசில் ஆஃப் மென் - ஸ்பெயின் ஆட்டத்தில் 10 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.