செய்திகள் :

சாம்பல் கலவரம்: சமாஜவாதி எம்பி, எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு!

post image

உத்தரப் பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்தில் உள்ள ஜாமா மசூதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2-ஆம் கட்ட ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற வன்முறை தொடர்பாக சமாஜவாதி கட்சியின் எம்பி ஜியா-உர்-ரஹ்மான் மற்றும் சமாஜவாதி எம்எல்ஏ இக்பால் மெஹ்மூத்தின் மகன் சோஹைல் இக்பால் உள்ளிட்ட 7 பேர் மீது முதல் தகவல் அறிக்கைகளை( எஃப்.ஐ.ஆர்கள்) காவல் துறையினர் பதிவு செய்துள்ளனர்.

சம்பல் மாவட்டத்துக்குள் கட்சித் தலைவர்கள் உள்பட வெளி ஆள்கள் நுழைவதற்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

சாம்பல் தாலுகாவில் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. பள்ளிகளுக்கு இன்று(நவ. 25) விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ஜாமா மசூதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2-ஆம் கட்ட ஆய்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து நடைபெற்ற வன்முறையின்போது துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியான நிலையில், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த ஒருவர், இன்று பலியானார்.

இது தொடர்பாக செய்தியாளர்களுடன் பேசிய காவல் துறை கண்காணிப்பாளர் கிரிஷின் குமார், இச்சம்பவம் தொடர்பாக 7 எஃப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

6 பேர்கள், ஜியா-உர்-ரஹ்மான் - சோஹைல் இக்பால் மற்றும் அடையாளம் தெரியாத 2750 பேர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வன்முறையில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

சாம்பல் கலவரம் பின்னணி

சம்பல் மாவட்டத்தில் ஜாமா மசூதி அமைந்துள்ள சா்ச்சை இடத்தில் பாரம்பரியமிக்க ஹரிஹர கோயில் பிரதானமாக இருந்ததாகவும், 1529-இல் முகலாய பேரரசா் பாபா் கோயிலைப் பகுதியாக இடித்து, மசூதியைக் கட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து ஞானவாபி மசூதி-காசி விஸ்வநாதா் உள்பட பல்வேறு வழிபாட்டுத் தலங்கள் தொடா்பான பல வழக்குகளில் ஹிந்துக்கள் தரப்பில் ஆஜராகி வாதாடிய உச்சநீதிமன்ற வழக்குரைஞா் விஷ்ணு சங்கா் ஜெயின், சம்பல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், மசூதியில் ஆய்வு நடத்த உத்தரவிட்டது. அதன்படி, இரு தரப்பினரின் முன்னிலையில் மசூதியில் நீதிமன்ற ஆணையா் கடந்த செவ்வாய்க்கிழமை (நவ. 19) ஆய்வு நடத்தினாா்.

இதன் தொடா்ச்சியாக, மசூதியில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் நீதிமன்ற ஆணையா் 2-ஆம் கட்ட ஆய்வைத் தொடங்கினாா். இதையடுத்து, உள்ளூா் மக்கள் அப்பகுதியில் கூடினா். அப்போது கூட்டத்தில் இருந்து சிலா், பாதுகாப்புப் பணியில் இருந்த காவலா்களை நோக்கி கற்களை வீசினா். அங்கு நின்றிருந்த வாகனங்களை தீவைத்து எரித்தனா்.

'அரிசன் காலனி' பெயரை அழித்த அன்பில் மகேஷ்!

நாமக்கல் மாவட்டத்தில் மல்லசமுத்திரத்தில் உள்ள அரசுப் பள்ளியின் 'அரிசன் காலனி' என்ற பெயரை கருப்பு மையால் அழித்து, மல்லசமுத்திரம் கிழக்கு எனப் பெயர் மாற்றம் செய்துள்ளார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்... மேலும் பார்க்க

நாகை மாவட்டத்திற்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

நாகை மாவட்டத்திற்கு நாளை(நவ. 26) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றம் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத... மேலும் பார்க்க

சம்பல் கலவரத்தன்று நான் ஊரில் இல்லை: சமாஜவாதி எம்பி

சம்பல் கலவரத்தன்று நான் ஊரில் இல்லை என்று சம்பல் சமாஜவாதி எம்.பி. ஜியா-உர்-ரஹ்மான் தெரிவித்துள்ளார்.உத்தரப் பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்தில் உள்ள ஜாமா மசூதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2-ஆம் கட்ட ... மேலும் பார்க்க

ரூ.15.08 கோடியில் செயற்கை இழையிலான தடகள ஓடுதளப் பாதை: உதயநிதி அறிவிப்பு!

கடலூர் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில்ரூ.15.08 கோடி மதிப்பில் செயற்கை இழையிலானதடகள ஓடுதளப் பாதைஅமைக்கப்படும்என்று துணை முதலமைச்சர்உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.துணை முதலமைச்சர் உதயநிதி இன்று (... மேலும் பார்க்க

இளஞ்சிவப்பு ஆட்டோ: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

சென்னையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்களைப் பெறுவதற்கான விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின்பேரில், ஒரு புதிய முன்னெடுப்பாக ‘இளஞ்சிவப்பு ஆட்டோக்களை’ தமிழ்நாடு அரசு அ... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு 11 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றம் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய புயல் சின்னம், ... மேலும் பார்க்க