'சோசலிச', 'மதச்சார்பற்ற' சொற்கள் அரசியலமைப்பு முகவுரையில் இருக்கும்: உச்சநீதிமன்...
ரூ.15.08 கோடியில் செயற்கை இழையிலான தடகள ஓடுதளப் பாதை: உதயநிதி அறிவிப்பு!
கடலூர் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் ரூ.15.08 கோடி மதிப்பில் செயற்கை இழையிலான தடகள ஓடுதளப் பாதை அமைக்கப்படும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
துணை முதலமைச்சர் உதயநிதி இன்று (25.11.2024) கடலூர் மாவட்டத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பொன்விழாவினை சிறப்பிக்கும் வகையில் நடைபெற்ற கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு வழங்கும் விழாவில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 683 ஊராட்சிகளுக்கு, 33 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 835 தொகுப்புகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
கடலூர் மாவட்டத்தில் விடியல் பயணம் திட்டம் - கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தின் கீழ் இதுவரைக்கும் 17 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டிருக்கிறீர்கள். ஒரு, ஒரு மகளிரும் இந்த விடியல் பயணத் திட்டத்தின் மூலம் மாதம் ரூபாய்
900-லிருந்து 1,000 ரூபாய் வரைக்கும் சேமிக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல், பெண்கள் படிப்பதற்கு புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்கள் மூலம் 21 ஆயிரம் மாணவ, மாணவியர் கடலூர் மாவட்டத்தில் மட்டும் மாதம் 1,000 ரூபாய் கல்வி உதவித்தொகை பெற்று வருகின்றார்கள்.
இதையும் படிக்க: சம்பல் கலவரம்: சமாஜவாதி எம்பி, எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு!
இங்கே இருக்கிற பேரறிஞர் அண்ணா ஸ்டேடியத்தை மேம்படுத்த ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் அளவில் பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. விருத்தாச்சலத்தில் உள்ள மினி ஸ்டேடியத்தில் கேலரியை மேம்படுத்துவது பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை 18 லட்சம் ரூபாய் அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ரூ. 18 லட்சம் செலவில் SDAT விளையாட்டு விடுதி மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் உங்களுடைய வேண்டுகோளை ஏற்று ஒரு முக்கியமான அறிவிப்பை இங்கே வெளியிட இருக்கின்றேன்.
பேரறிஞர் அண்ணா அவர்களால் 1968-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 1975-ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா ஸ்டேடியம் விரைவில் பொன்விழா காண உள்ளது.
பல சர்வதேச – தேசிய அளவிலான வீரர்களை உருவாக்கிய அண்ணா ஸ்டேடியத்தில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் செயற்கை இழை ஓடுதளம் – Artificial Fibre Synthetic Track அமைக்கப்படும் என்ற அறிவிப்பை முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின் பேரில், அவருடைய அனுமதியோடு, அவருடைய வழிகாட்டுதலின்படி உங்களுடைய கோரிக்கையை ஏற்று இங்கே அறிவிக்கின்றேன். அதில் மகிழ்ச்சி அடைகின்றேன். நீங்களும் மகிழ்ச்சி அடைவீர்கள் என்று நம்புகிறேன் என்று பேசினார்.