செய்திகள் :

மகாராஷ்டிர பேரவையில் குறைந்த பெண் எம்எல்ஏ-க்கள் எண்ணிக்கை!

post image

மும்பை: மகாராஷ்டிரம் மாநில பேரவையில் 24 பெண் பேரவை உறுப்பினர்கள் இருந்த நிலையில், 2024 பேரவைத் தேர்தலில் 21 பெண் வேட்பாளா்கள் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து பேரவையில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

288 இடங்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு கடந்த புதன்கிழமை (நவ. 20) தோ்தல் நடைபெற்றது. சனிக்கிழமை வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில், ஆளும் பாஜக-சிவசேனை-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வென்று மீண்டு ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. பாஜகவைச் சேர்ந்த ஒருவரே முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், மகாராஷ்டிரம் மாநில பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்த புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, கடந்த பேரவையில் 24 பெண் உறுப்பினர்கள் இருந்தனர். 2024 பேரவைத் தேர்தலில் 21 பெண் உறுப்பினர்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். அதாவது,

பாஜகவில் 14 பெண் உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனா். அவர்களில் 10 போ் ஏற்கெனவே உறுப்பினர்களாக இருந்து மீண்டும் போட்டியிட்டு தோ்வாகியுள்ளனா். 2 போ் சிவசேனை கட்சியில் இருந்தும், 4 போ் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்தும், காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒருவர் என 21 பேர் வெற்றி பேரவைக்கு தேர்வாகியுள்ளனா்.

தற்போது தேர்வாகியுள்ள புதிய பேரவை உறுப்பினர்களில் 59 சதவிகிதம் பேர் பட்டம் பெற்றவர்கள், 17 சதவிகிதம் பேர் முதுகலை பட்டம் பெற்றவர்கள்.

இதையும் படிக்க |மகாராஷ்டிரம்: 60 ஆண்டுகளுக்குப்பின் எதிர்க்கட்சித் தலைவர் இல்லா பேரவை!

முந்தைய பேரவையில் 44 சதவிகிதம் பேர் பட்டம் பெற்றவர்கள், 15 சதவிகிதம் பேர் முதுகலை பட்டம் பெற்றவர்கள்.

40 சதவிகிதம் பேர் 56 முதல் 70 வயதிற்குட்பட்டவர்கள். முந்தைய பேரவையில் இதே வயதுடையவர்கள் 34 சதவிகிதம் பேர்.

கடந்த 2019 பேரவைத் தேர்தலில் 25 முதல் 40 வயதிற்குட்பட்டவர்களில் 14 சதவிகிதம் பேரும்,

2014 பேரவை தேர்தலில் 20 சதவிகிதம் பேரும் வெற்றி பெற்றிருந்த நிலையில், இந்த பேரவைத் தேர்தலில் 8 சதவிகிதம் பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

புதிய பேரவை உறுப்பினர்களில் 86 சதவிகிதம் பேர் விவசாயம், வணிகத் தொழிலலையும், மீதமுள்ளவர்கள் 14 சதவிகிதம் பேர் அரசியல் மற்றும் சமூகப்பணியை தங்களது தொழிலாக தெரிவித்துள்ளனர்.

நாகூர் சந்தனக்கூடு திருவிழா முன்னேற்பாடு: உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

நாகூர் தர்காவின் சந்தனக்கூடு திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் தர்காவின் சந்தனக்கூடு திருவிழா வருகி... மேலும் பார்க்க

2026 பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும்: அமைச்சர் செந்தில்பாலாஜி

கோவை: 2026 பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.திமுக சட்டத்துறை மேற்கு மண்டலத்திற... மேலும் பார்க்க

மொழி, கலை இரண்டையும் கண் போன்று காக்க வேண்டும்: முதல்வா் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: எந்த ஆதிக்கத்தையும் வெல்லும் ஆற்றல் மொழிக்கும் கலைக்கும் உண்டு. அந்த இரண்டையும் கண் போன்று காக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா். முத்தமிழ்ப் பேரவை பொன்விழா ஆண்டு மற்றும் விருது... மேலும் பார்க்க

தமிழ் விரோதி பிரசாரம் சிலருக்கு பழக்கமாகிவிட்டது: நிர்மலா சீதாராமன்

எதில பார்த்தாலும், எப்ப பார்த்தாலும் தமிழ் விரோதி பிரசாரம் சிலருக்கு பழக்கமாகிவிட்டது போலும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் கருத்து தெரிவித்துள்ளார். பொங்கல் திருநாளன்று பட்டய கணக்கர்(சி.ஏ)... மேலும் பார்க்க

திமுக கருணாநிதியின் குடும்ப கட்சி: எடப்பாடி கே.பழனிசாமி

திமுக கருணாநிதியின் குடும்ப கட்சி. அந்த குடும்பத்தில் இருப்பவர்கள் மட்டும் தான் அந்த கட்சிக்கு தலைவராக முடியும், முதல்வராக முடியும். ஆனால், அதிமுகவில் உழைப்பவர்கள், விஸ்வாசமாக இருப்பவர்கள் கட்சியின் ப... மேலும் பார்க்க

அதிமுக நலனுக்காக தைரியமாக முடிவு எடுத்தவர் ஜானகி : ரஜினிகாந்த் புகழாரம்

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் எம்ஜிஆரின் மனைவியுமான ஜானகி நூற்றாண்டு விழாவை தான் வரவேற்பதாகவும், அதிமுக நலனுக்காக அரசியல் சரிபடாது என தைரியமாக முடிவு எடுத்தவர் ஜானகி என நடிகர் ரஜினிகாந்த் புகழாரம் ச... மேலும் பார்க்க