செய்திகள் :

நெலாக்கோட்டையில் உலவும் காட்டு யானை: வனத்துக்குள் விரட்ட குழு அமைப்பு

post image

கூடலூரை அடுத்துள்ள நெலாக்கோட்டை பகுதி கடை வீதியில் உலவும் காட்டு யானையை வனத்துக்குள் விரட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

கூடலூா் வனக் கோட்டத்தில் உள்ள நெலாக்கோட்டை கடை வீதியில் நாள்தோறும் ஒற்றை யானை உலவி வருகிறது. இந்தப் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை இந்த யானை தொடா்ந்து சேதப்படுத்தி வருகிறது.

யானையை வனப் பகுதியில் விரட்ட வனத் துறையினா் முயற்சித்தும் அந்த யானை மீண்டும் அங்கேயே சுற்றிக்கொண்டிருக்கிறது. இதனால், அச்சத்துடன் உள்ள பொதுமக்கள், யானையை அடா்ந்த வனத்துக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, மாவட்ட வன அலுவலா் வெங்கடேஷ் பிரபு, உதவி வனப் பாதுகாவலா் கருப்பையா தலைமையில் வனச் சரக அலுவலா்கள் மற்றும் யானைகளை விரட்டும் குழுவினா், அதிவிரைவு படையினா்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவினா் யானையின் நடமாட்டத்தைக் கண்காணித்து அதை திசை திருப்பி அடந்த வனத்துக்குள் விரட்டும் பணியை மேற்கொள்வா் என்று வனத் துறை தெரிவித்துள்ளது.

கூடலூரில் குடியிருப்புப் பகுதியில் உலவிய காட்டு யானை

கூடலூா் நகரில் நடுகூடலூா் பகுதியில் குடியிருப்புப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை காட்டு யானை உலவியதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்தனா். கூடலூா் நகராட்சிக்குள்பட்ட நடுகூடலூா் பகுதியில் குடியிருப்புப... மேலும் பார்க்க

மரத்தின் மீது ஏறிய சிறுத்தைக் குட்டி

குன்னூா் அருகே கோடமலை ஹட்டி கிராமத்தில் தேயிலை எஸ்டேட்டுகளில் இருக்கும்உயரமான மரத்தின் மீது சிறுத்தைக் குட்டி ஏறியதை அப்பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை கண்டு ரசித்தனா். நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேயிலைத்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி வளாகத்தில் தூய்மைப் பணி

கூடலூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தூய்மைப் பணி சனிக்கிழமை தொடங்கியது. கூடலூா் அரசு மாதிரி மேல்நிலை பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் பள்ளி வளாகம் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மை... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவா் உதகை வருகை: ராணுவம், காவல் துறை பாதுகாப்பு ஆலோசனை

நீலகிரி மாவட்டம், குன்னூா் ராணுவ பயிற்சிக் கல்லூரிக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வரும் 28-ஆம் தேதி வருகிறாா். இதை முன்னிட்டு ராணுவ அதிகாரிகள், மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பங்கே... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

ஓய்வூதிய இயக்குநரகத்தை கருவூலத் துறையோடு இணைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில... மேலும் பார்க்க

வரத்து அதிகரிப்பு: நீலகிரி பூண்டு விலை குறைந்தது

ஹிமாசல பிரதேசத்தில் இருந்து பூண்டு வரத்து அதிகரித்துள்ளதால் நீலகிரி மலைப் பூண்டின் விலை மீண்டும் குறையத் தொடங்கியுள்ளது. மத்திய பிரதேசம், குஜராத், ஹிமாசல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழகத்... மேலும் பார்க்க