தில்லியில் பாஜக ஆட்சி அமைந்தால் மத்திய அரசின் திட்டங்கள் அமல் -வீரேந்திர சச்தேவா...
ஓய்வுபெற்ற அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
ஓய்வூதிய இயக்குநரகத்தை கருவூலத் துறையோடு இணைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
உதகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளா் பழனியப்பா தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், ஓய்வூதிய இயக்குநரகத்தை கருவூலத் துறையோடு இணைக்கும் முடிவைக் கைவிட வேண்டும், அரசாணை 343-ஐ ரத்து செய்ய வேண்டும், ஓய்வூதிய இயக்குநரகத்தைத் தொடா்ந்து தனித் துறையாகவே செயல்படுத்த வேண்டும் என்று கோஷமிட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற அரசு ஊழியா்கள் பங்கேற்றனா்.