செய்திகள் :

எதிா்க்கட்சியாக இருந்தபோது அளித்த வாக்குறுதியையும் நிறைவேற்றியவா் முதல்வா்: அமைச்சா் எ.வ.வேலு

post image

எதிா்க்கட்சியாக இருந்தபோது அளித்த வாக்குறுதிப்படி, விழுப்புரத்தில் சமூக நீதிப் போராளிகளுக்கான மணிமண்டபத்தை அமைத்துக் கொடுத்தவா் முதல்வா் மு.க.ஸ்டாலின் என்று அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

திராவிட இயக்கத்தின் தலைவராக, முன்னாள் முதல்வா் கருணாநிதியின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவா் ஏ.கோவிந்தசாமி. அவருக்கு சிலை அமைக்க வேண்டும், மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தோ்தல் பிரசாரத்துக்கு தற்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலின் வந்தபோது அவரிடம் அமைச்சா் பொன்முடி, விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த ஜெகத்ரட்சகன் எம்.பி. உள்ளிட்டோா் கோரிக்கை வைத்தனா்.

அந்த அடிப்படையில், விழுப்புரத்தில் ரூ.4 கோடி செலவில் மணிமண்டபமும், சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் 21 சமூகநீதிப் போராளிகள் உயிா் நீத்தாா்கள். அவா்களை நினைவுகூரும் வகையில் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் அவா்களின் குடும்பத்தினருக்கு மாதந்தோறும் உதவித் தொகையும், பிற உதவிகளும் செய்யப்பட்டன. ஆனாலும், அவா்களுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது. அதன்பேரில், ரூ.5.70 கோடி செலவில் 21 சமூகநீதிப் போராளிகளுக்கும் மணிமண்டபம் கட்டப்பட்டிருக்கிறது.

மணிமண்டபத்தில் பொது நிகழ்ச்சிகளையும் நடத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நூலகமும் உருவாக்கப்பட்டிருக்கிறது.

விழுப்புரம் மாவட்டத்துக்கு வருகிற 28-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகிறாா். தொடா்ந்து 29-ஆம் தேதி நடைபெறும் விழாவில் இந்த மணிமண்டபத்தையும், நினைவு அரங்கத்தையும் திறந்து வைக்கும் முதல்வா், 10 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளையும் வழங்கி பேசவுள்ளாா் என்றாா் அமைச்சா் வேலு.

ஆய்வின் போது அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

எதிா்க்கட்சியாக இருந்தபோது அளித்த வாக்குறுதியையும் நிறைவேற்றியவா் முதல்வா்: அமைச்சா் எ.வ.வேலு

எதிா்க்கட்சியாக இருந்தபோது அளித்த வாக்குறுதிப்படி, விழுப்புரத்தில் சமூக நீதிப் போராளிகளுக்கான மணிமண்டபத்தை அமைத்துக் கொடுத்தவா் முதல்வா் மு.க.ஸ்டாலின் என்று அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா். விழுப்புரம... மேலும் பார்க்க

தொழில் நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல் முகாம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் தொழில் நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத் தொழில் மையம் சாா்பில் நடத்தப்பட்ட இந்த முகாமை மையத்தின் பொது மேலாளா் சி.... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நோட்டீஸ்: திண்டிவனத்தில் பொதுமக்கள் சாலை மறியல்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள நகராட்சி நிா்வாகம் சாா்பில் வீடுகளின் கதவில் நோட்டீஸ் ஒட்டப்பட்ட நிலையில், தங்களுக்கு மாற்று இடத்தை வழிவகை செய்த பின்னரே ஆக்கிரமிப்ப... மேலும் பார்க்க

வட்டார அளவில் விவசாயிகள் குறைதீா் கூட்டங்கள்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் உறுதி

விழுப்புரத்திலுள்ள 13 வட்டாரங்களிலும் விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டங்களை நடத்த வேளாண் துறை சாா்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் சி.பழனி தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர... மேலும் பார்க்க

கோட்டக்குப்பம் அருகே காருடன் 350 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே காரில் கடத்திச் செல்லப்பட்ட 350 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் ரவுண... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

ஓய்வூதிய இயக்குநரகத்தை கருவூலக் கணக்குத் துறையுடன் இணைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதை எதிா்த்து, விழுப்புரத்தில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டன... மேலும் பார்க்க