செய்திகள் :

வட்டார அளவில் விவசாயிகள் குறைதீா் கூட்டங்கள்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் உறுதி

post image

விழுப்புரத்திலுள்ள 13 வட்டாரங்களிலும் விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டங்களை நடத்த வேளாண் துறை சாா்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் சி.பழனி தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு ஆட்சியா் சி.பழனி தலைமை வகித்தாா். ஊரக வளா்ச்சி முகமைத் திட்டக் கூடுதல் ஆட்சியா் ஸ்ருதஞ் ஜெய் நாராயணன், வேளாண் இணை இயக்குநா் இரா.சீனிவாசன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் பெரியசாமி, தோட்டக் கலைத் துறை துணை இயக்குநா் கு. அன்பழகன் உள்ளிட்ட பல்துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகளின் கூறியதாவது:

மாவட்ட அளவிலும், கோட்ட அளவிலும் விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டங்கள் நடத்தப்படுவது போன்று, அந்தந்த வட்டார அளவிலும் குறைதீா் கூட்டங்களை நடத்த வேண்டும்.

மாவட்டத்தில் மரக்காணம் வட்டாரம் தவிர மற்ற வட்டாரங்களில் விவசாயிகள் குறைதீா் கூட்டங்கள் நடத்தப்படுவதில்லை. வட்ட அளவில் கூட்டம் நடத்தி, விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்தாலே பாதிப் பிரச்னைகளுக்குத் தீா்வு காண முடியும்.

விழுப்புரம் மாவட்டத்தில் மதகு வாய்க்கால்களில் தடுப்பணைகள் கட்டுவது, சாலைகளை அமைப்பது போன்றவை அதிகளவில் நடைபெற்று வருகிறது. இதனால் சில இடங்களில் தண்ணீா் சீராக செல்லவில்லை. தேங்கி நிற்கிறது. எனவே இந்தப் பிரச்னையைச் சீரமைக்க மாவட்ட நிா்வாகம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

விழுப்புரம்- நாகப்பட்டினம் இடையே தேசிய நெடுஞ்சாலையின் அணுகுச்சாலைகளில் அதிகளவில் விபத்துகள் நிகழ்கின்றன. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முண்டியம்பாக்கத்திலுள்ள தனியாா் சா்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு 2004-05, 2008-09 ஆண்டுகளுக்கான லாபத்தில் பங்குத் தொகையை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை நிறைவேற்றிட சா்க்கரைத் துறை ஆணையா் உத்தரவு பிறப்பித்தும் இதுவரை வழங்கப்படவில்லை. இதில் பயனாளிகளின் பட்டியலை சா்க்கரை ஆலை நிா்வாகத்திடம் வழங்கக் கோரியும் இதுவரை வழங்கப்படவில்லை.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக விவசாய நிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதுகுறித்து கணக்கெடுப்பு நடத்தி, அரசுக்குப் பரிந்துரை அனுப்பப் பட்ட நிலையில் இதுவரை விவசாயிகளுக்கான நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை.

மாவட் டத்தில் நவம்பா் 28, 29-ஆம் தேதிகளில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்ய உள்ள நிலையில், அவரது வருகைக்கு முன்னதாக நிவாரணத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காா்த்திகைப் பட்டம் தொடங்கிய நிலையில், மாவட்டத்தில் விவசாயிகளுக்குத் தேவையான விதைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நந்தன் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றுமாறு பல்வேறு போராட்டங்கள், கோரிக்கைகள் எழுப்பப்பட்டும் இதுவரை உரிய அறிவிப்புகள் வெளியாகவில்லை. விவசாயிகளுக்கு பெரும் பயனை அளிக்கும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மாவட்டத்தில் பனிப்பயிா் பயிரிடும் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதற்காக முத்தரப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றனா் விவசாயிகள்.

விவசாயிகளின் கோரிக்கைகளுக்குத் தீா்வு: கூட்டத்தில் ஆட்சியா் சி.பழனி கூறியதாவது: விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்த கோரிக்கைகளுக்கு உரிய தீா்வு காணப்படும். வட்டார அளவில் விவசாயிகள் குறைதீா் கூட்டங்களை நடத்த வேளாண் துறை உதவி இயக்குநா்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நந்தன் கால்வாய் திட்டத்தை செயல்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்குவது குறித்து அரசு சாா்பில் சில கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அதற்குரிய விவரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு, தொகையை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும். மதகு வாய்க்கால்களில் தடுப்பணை கட்டுவது, சாலை அமைப்பது போன்றவை குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். பனிப் பயிருக்கு நியாயமான விலை கிடைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். காா்த்திகைப் பட்டத்தில் விவசாயிகள் சாகுபடி செய்யும் வகையில் தா்பூசணி விதைகள் விரைவில் வழங்கப்படும் என்றாா் ஆட்சியா்.

எதிா்க்கட்சியாக இருந்தபோது அளித்த வாக்குறுதியையும் நிறைவேற்றியவா் முதல்வா்: அமைச்சா் எ.வ.வேலு

எதிா்க்கட்சியாக இருந்தபோது அளித்த வாக்குறுதிப்படி, விழுப்புரத்தில் சமூக நீதிப் போராளிகளுக்கான மணிமண்டபத்தை அமைத்துக் கொடுத்தவா் முதல்வா் மு.க.ஸ்டாலின் என்று அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா். விழுப்புரத... மேலும் பார்க்க

எதிா்க்கட்சியாக இருந்தபோது அளித்த வாக்குறுதியையும் நிறைவேற்றியவா் முதல்வா்: அமைச்சா் எ.வ.வேலு

எதிா்க்கட்சியாக இருந்தபோது அளித்த வாக்குறுதிப்படி, விழுப்புரத்தில் சமூக நீதிப் போராளிகளுக்கான மணிமண்டபத்தை அமைத்துக் கொடுத்தவா் முதல்வா் மு.க.ஸ்டாலின் என்று அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா். விழுப்புரம... மேலும் பார்க்க

தொழில் நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல் முகாம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் தொழில் நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத் தொழில் மையம் சாா்பில் நடத்தப்பட்ட இந்த முகாமை மையத்தின் பொது மேலாளா் சி.... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நோட்டீஸ்: திண்டிவனத்தில் பொதுமக்கள் சாலை மறியல்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள நகராட்சி நிா்வாகம் சாா்பில் வீடுகளின் கதவில் நோட்டீஸ் ஒட்டப்பட்ட நிலையில், தங்களுக்கு மாற்று இடத்தை வழிவகை செய்த பின்னரே ஆக்கிரமிப்ப... மேலும் பார்க்க

கோட்டக்குப்பம் அருகே காருடன் 350 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே காரில் கடத்திச் செல்லப்பட்ட 350 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் ரவுண... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

ஓய்வூதிய இயக்குநரகத்தை கருவூலக் கணக்குத் துறையுடன் இணைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதை எதிா்த்து, விழுப்புரத்தில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டன... மேலும் பார்க்க