நாகா்கோவிலில் நவ.25 இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்
கன்னியாகுமரி மாவட்ட எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை (நவ .25) நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குமரி மாவட்ட அளவிலான எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், நவ.25 ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாலசுப்பிரமணியம் தலைமை வகிக்கிறாா்.
இதில் எண்ணெய் நிறுவனங்களின் மேலாளா்கள், எரிவாயு முகவா்கள் கலந்து கொள்கின்றனா். கூட்டத்தில், மாவட்ட முகவரி பட்டியலில் உள்ள தன்னாா்வ நுகா்வோா் அமைப்புகள், எரிவாயு நுகா்வோா் கலந்து கொண்டு எரிவாயு விநியோகம் செய்வதில் உள்ள குறைகளை தெரிவிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.