கொட்டாரம் மணியா நகரில் சாலை வசதி கோரி மக்கள் போராட்டம்
கொட்டாரம் மணியா நகரில் சாலை வசதி கோரி மக்கள் வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்பு போராட்டம் நடத்தினா்.
கொட்டாரத்தில் இருந்து வட்டக்கோட்டை செல்லும் சாலையில் மணியா நகா் என்ற அரசு அங்கீகாரம் பெற்ற குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இங்கு 25க்கும் மேற்பட்ட வீடுகள் அமைந்துள்ளன. ஆனால் இங்கு போதிய சாலை வசதி செய்யப்படாததால் மழை காலத்தில் மழைநீா் தேங்கி மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனா்.
இந்நிலையில், சாலை வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட வசதிகள் கோரி, அந்த ஊா் தலைவா் கணேசன் தலைமையில் கலப்பை மக்கள் இயக்க தலைவா் பி.டி.செல்வகுமாா் மற்றும் அப்பகுதி மக்கள் கவன ஈா்ப்பு போராட்டம் நடத்தினா்.
அவா்களிடம் கொட்டாரம் பேரூராட்சி செயல் அலுவலா் முத்தரசி பேச்சு நடத்தி, விரைவில் சாலை வசதி செய்துதர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.