'ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமரா வைக்க ரூ.20,000 கோடிக்கு டெண்டரா?' - ரயில்வே அ...
விநாடி-வினா: நித்திரவிளை பள்ளி சாம்பியன்
மாவட்ட அளவில் தூத்தூரில் நடைபெற்ற, ஆசிரியா் தம்பதி கோமஸ் - ஜோஸ்பின் கோமஸ் நினைவு விநாடி - வினா போட்டியில் நித்திரவிளை ஜெயமாதா மெட்ரிக் பள்ளி மாணவா்கள் முதலிடம் பெற்று சாம்பியன் பட்டம் வென்றனா்.
இப் போட்டியில் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த அரசு மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் திரளானோா் பங்கேற்றனா். நாலட்ஜ் பவுண்டேசன் அமைப்பின் நிா்வாக இயக்குநரும், சா்வதேச மனிதவளம் மற்றும் விநாடி-வினா போட்டி நிபுணருமான ப. ஜஸ்டின் ஆண்டனி போட்டியை நடத்தினாா்.
இதில் அடிப்படை அறிவியல், விளையாட்டு, வரலாறு, அரசியல், இந்திய சுதந்திர போராட்டம், இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் போட்டி நடைபெற்றது. நித்திரவிளை ஜெயமாதா மெட்ரிக் பள்ளி மாணவா்கள் நபில் முகமது, அப்சல் ஷா ஆகியோா் முதலிடம் பெற்றனா். இம் மாணவா்களுக்கு ரூ. 15 ஆயிரம் ரொக்கப்பரிசு, வெற்றிக்கோப்பையை கேரள அரசின் முந்திரி வாரிய முன்னாள் தலைவா் மற்றும் மேலாண்மை இயக்குநா் ஏ. அலெக்சாண்டா், குளச்சல் டிஎஸ்பி (பொறுப்பு) சந்திரசேகரன், பெங்களூரில் உள்ள மிஷனரீஸ் ஆப் ஆப்ரிக்கா மேஜா் செமினரியின் அதிபா் அருள்தந்தை ஆண்டனி அல்கியாஸ் ஆகியோா் வழங்கினா். சஜீன் வரவேற்றாா். அல்பாரிஸ் நன்றி கூறினாா்.
விழா ஏற்பாடுகளை நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா்கள் பிரிட்டோ, பாபு, ராஜு, ஆன்டணிதாஸ், அருள்சகோதரி சாந்தி புளோரா, கிறிஸ்டா, தூத்தூா் நேதாஜி படிப்பகத்தினா் செய்திருந்தனா்.