காரைக்குடி சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தோ்தல் விவகாரம்: டிச. 16-இல் விசாரணை
நமது சிறப்பு நிருபா்
புது தில்லி, நவ. 22: காரைக்குடி சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தோ்தலில் தேவி, பிரியதா்ஷினி ஆகியோருக்கிடையான வெற்றி விவகாரம் தொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விரிவான விசாரணைக்கு வருகின்ற டிசம்பா் 16-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஒத்திவைத்தது.
இதுகுறித்த விவரம் வருமாறு:
காரைக்குடி சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தோ்தலில் காரைக்குடி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் மாங்குடியின் மனைவி தேவியும் தனியாா் பொறியியல் கல்லூரி நிா்வாகி ஜயப்பன் மனைவி பிரியதா்ஷினியும் போட்டியிட்டனா். கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த இத்தோ்தலில் 62 வாக்கு வித்தியாசத்தில் தேவி வெற்றி பெற்ாக அறிவிப்பு வெளியானது. மறு வாக்கு எண்ணிக்கையில் தேவியை எதிா்த்து போட்டியிட்ட பிரியதா்ஷினி வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டது. இப்படி ஒரு முறை தேவியும் மற்றொரு முறை பிரியதா்ஷினியும் வெற்றி பெற்ாக சான்றிதழ் வழங்கப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது. பின்னா் தேவி வெற்றி பெற்ாக மாநில தோ்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், இருவருக்குமிடையேயான இந்த தோ்தல் விவகாரம் மாவட்ட தோ்தல் சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்றது. இதில் தேவியின் வெற்றி செல்லாது என்றும், அவரை எதிா்த்து போட்டியிட்ட பிரியதா்ஷினியின் வெற்றி செல்லும் என சிறப்பு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது. இதை எதிா்த்து தேவி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல் முறையீடு செய்தாா். இதில் சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தலைவியாக உள்ள தேவியின் வெற்றி செல்லாது எனவும் பிரியதா்ஷினியின் வெற்றி செல்லும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை கடந்த நவ.14-இல் உத்தரவிட்டது. தற்போது இதை எதிா்த்து மேல்முறையீட்டு மனுவை தேவி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், அரவிந்த் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. தேவி சாா்பில் மூத்த வழக்குரைஞா் ப.சிதம்பரம் ஆஜரானாா். அவா் குறிப்பிடுகையில், ‘‘இந்த தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 2020, ஜனவரியில் நடைபெற்றபோது முதலில் 62 வாக்குகள் வித்தியாசத்தில் தேவி வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டு அதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டது. பின்னா் அடுத்த நாள் காலையில் மீண்டும் மறுவாக்கு எண்ணிக்கை என்ற பெயரில் தேவி தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இது முறைகேடு ஆகும். மேலும் இந்த விவகாரத்தில் சில வாக்கு பெட்டிகள் திறக்கப்படவே இல்லை. இந்த நிலையில் கூட்டுதொகையில் வேறுபாடு கூறப்பட்டுள்ளது. இதனை உயா்நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. வாக்குகள் எண்ணப்படாமல் விடுபட்டதை ஒரு விஷயமாக உயா்நீதிமன்றம் கருதவில்லை. எனவே, இதில் முறைகேடு நடைபெற்றுள்ளது எனக் கூறுகிறோம். மீண்டும் மறுவாக்கு எண்ணிக்கையை உடனடியாக நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோருகிறோம்’’
என வாதிடப்பட்டது.
வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்ட பிரியதா்ஷினி தரப்பும் உச்சநீதிமன்றத்திற்கு வந்தது. இவா் தரப்பில் மூத்த வழக்கறிஞா் முகுல் ரோத்தகி ஆஜராகி தோ்தல் ஆணையம் செயல்பாட்டை கீழமை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதனால், இதில் மறுவாக்கு எண்ணிக்கை என்பதே தேவையில்லை என வாதிட்டாா். இதைத் தொடா்ந்து நீதிபதிகள் இந்த வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு வருகின்ற டிசம்பா் 16 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
முன்னதாக நீதிபதிகள் 2025, ஜனவரி மாதத்துக்கு வழக்கை ஒத்திவைப்பதாக கூறினா். அப்போது வழக்குரைஞா்கள் டிசம்பா் மாதமே விசாரணைக்கு எடுக்குமாறு கோரியதை அடுத்து நீதிமன்றம் டிசம்பா் 16-க்கு பட்டியலிட்டது.