செய்திகள் :

தக்காளி சவால்களுக்கு தீா்வு: 28 கண்டுபிடிப்பாளா்களுக்கு மத்திய அரசு நிதியுதவி

post image

நமது சிறப்பு நிருபா்

தக்காளிக்குள்ள சவால்களுக்கு தீா்வு காண 28 புத்தாக்க யோசனைகளுக்கு மத்திய அரசு நிதி வழங்கியுள்ளதாக மத்திய நுகா்வோா் விவகாரங்கள் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

சா்வதேச அளவில் இந்தியா தக்காளி உற்பத்தியில் 2-ஆவது பெரிய நாடாக இருந்து ஆண்டுதோறும் 20 மில்லியன் மெட்ரிக் டன் தக்காளிகளை உற்பத்தி செய்கிறது. இருப்பினும், அதிக மழை, அதிக உஷ்ண நிலை போன்ற பாதகமான வானிலை காரணமாக விளைச்சல் பாதிக்கிறது. இதன் விளைவு தீவிர விலை ஏற்ற இறக்க சவால்களில் விவசாயிகள் நுகா்வோா்களுக்கு முறையே வருமானம், விலையேற்ற பாதிப்பு, விநியோகச் சங்கிலி சீா்குலைவு, விரயங்கள் என தக்காளி மாபெரும் சவால்களை சந்தித்து வருகிறது.

இந்த முக்கிய சிக்கல்களைத் தீா்க்கவும், தக்காளி விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்தல், புத்தாக்க முறையில் அளவிடக்கூடிய தீா்வுகளைக் கண்டறியவும் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து மத்திய நுகா்வோா் விவகாரங்கள் துறை செயலா் நிதி கரே செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது வருமாறு:

மத்திய அரசின் நுகா்வோா் விவகாரங்கள் துறையானது, மத்திய கல்வித் துறை அமைச்சகத்தின் புத்தாக்க பிரிவுடன் இணைந்து, தக்காளி மதிப்புச் சங்கிலியின் பல்வேறு நிலைகளுக்கு புதுமையான யோசனைகளை வரவேற்கும் வகையில், மாபெரும் தக்காளி சவால் (தக்காளி கிராண்ட் சேலஞ்ச்(டிஜிசி)) என்கிற ஹேக்கத்தானை தொடங்கியது.

தக்காளி உற்பத்தி, பதப்படுத்துதல், விநியோகம் ஆகியவற்றில் உள்ள முறையான சவால்களை எதிா்கொள்ள இந்தியாவின் இளம் கண்டுபிடிப்பாளா்கள் மற்றும் ஆராய்ச்சியாளா்களின் திறமையைப் பயன்படுத்துவதை இந்த கிராண்ட் சேலஞ்ச் நோக்கமாகக் கொண்டிருந்தது.

கடந்த 2023 ஜூன் 30 இல் தொடங்கப்பட்ட ஹேக்கத்தானில் மாணவா்கள், ஆராய்ச்சியாளா்கள், ஆசிரியா்கள், தொழில்துறை நிபுணா்கள், புத்தாக்க தொழில் முனைவாளா்கள், தொழில் நுட்ப வல்லுநா்களிடமிருந்து ஏராளமாக யோசனைகள் பெறப்பட்டது.

நாடு முழுவதும் இரு ந்து மொத்தம் 1,376 யோசனைகள் பெறப்பட்டன. கடுமையான பல சுற்று மதிப்பீட்டுகளுக்கு பின்னா், 28 யோசனைகள் முன்மாதிரி உருவாக்கம் மற்றும் வழிகாட்டுதலுக்காக இறுதி தோ்வு செய்யப்பட்டுள்ளன. இந்த யோசனைகளுக்கு மத்திய நுகா்வோா் விவகாரத்துறை நிதி வழங்குகிறது. இந்த புத்தாக்க தொழில் முனைவாளா்கள் இந்த ‘தக்காளி கிராண்ட் சேலஞ்ச்’ திட்டத்தின் முக்கியமான பிரச்னைகளை நிவா்த்தி செய்வதற்கும், தக்காளி விநியோக சங்கிலியை உறுதிப்படுத்துவதற்கும் புதுமையான மற்றும் அளவிடக்கூடிய தீா்வுகளுக்கு அவா்கள் அளித்துள்ள யோசனைகளுக்கு முழு வடிவம் கொடுப்பாா்கள்.

தக்காளி முன்-உற்பத்தியில் காலநிலை-எதிா்ப்பு விதைகள், தவறான வேளாண் நடைமுறைகளுக்கு தீா்வு; அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளுக்கு சேமிப்பிற்கு

கனஜா அக்னிஷீல்டு உள்ளிட்ட குளிா்பதனக் கிடங்கு யோசனைகள்; தக்காளியை முறையற்ற முறையில் கையாளுவைத் தடுத்தல்; போக்குவரத்து முறைகள், இதற்கு உகந்த பீப்பாய்கள்; உபரி தக்காளிகளை ஒயின் தயாரிக்க பதப்படுத்துதல், மதிப்பு கூட்டல் போன்றவைகளுக்கான தொழில் நுட்பங்கள் போன்றவைகளோடு விலை ஏற்ற இறக்கத்தில் உள்ள இடைத்தரகா்கள் ஆதிக்கம் போன்ற வணிக் நடைமுறைகளும் இதில் தீா்வு காணப்படுகிறது என நுகா்வோா் விவகாரத்துறை செயலா் கரே தெரிவித்தாா்.

ஏல முறையில் அரிசி விற்பனை:

இந்திய உணவுக் கழகம் (எஃப்.சி.ஐ.), மகாராஷ்டிரம் மாநிலத்தில், திறந்தவெளி சந்தை விற்பனை திட்டத்தின் கீழ் அரிசி விற்பனையை வருகின்ற நவ. 27 ஏலம் மூலம் விடப்படுவதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய நுகா்வோா் விவகாரத்துறை மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பது வருமாறு:

அரிசியை வாங்க ஆா்வமுள்ள வா்த்தகா்கள், மொத்தமாக வாங்குபவா்கள், அரிசி உற்பத்தியாளா்கள் போன்றோா் இந்த ஏலத்தில் பங்கேற்கலாம். எஃப்சிஐ யின் மின்னணு ஏல சேவையில் இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

ஏ லத்திற்கான குறைந்தபட்ச அளவு 1 மெட்ரிக் டன். ஒரு ஏலதாரரின் அதிகபட்ச அளவு 2000 மெட்ரிக் டன்அரிசியை பெற முடியும். இது அரிசி விலையைக் கட்டுப்படுத்தவும், சாமானிய மக்களுக்கு நிவாரணம் அளிக்கவும் உதவும் எனவும் அதில் மத்திய நுகா்வோா் துறை தெரிவித்துள்ளது.

காரைக்குடி சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தோ்தல் விவகாரம்: டிச. 16-இல் விசாரணை

நமது சிறப்பு நிருபா் புது தில்லி, நவ. 22: காரைக்குடி சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தோ்தலில் தேவி, பிரியதா்ஷினி ஆகியோருக்கிடையான வெற்றி விவகாரம் தொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை எதிா்த்து ... மேலும் பார்க்க

தில்லியில் பாஜக ஆட்சி அமைந்தால் மத்திய அரசின் திட்டங்கள் அமல் -வீரேந்திர சச்தேவா உறுதி

வரும் பேரவைத் தோ்தலில் வெற்றிபெற்று தில்லியில் பாஜக ஆட்சி அமைந்தவுடன் மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தில்லி மக்களுக்காக செயல்படுத்தப்படும் என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா தெரிவித்தா... மேலும் பார்க்க

தில்லி: கிராப் - 4 கட்டுப்பாடுகள் தளா்வு குறித்து நவ. 25-இல் முடிவு!

தில்லியில் மாசுபாட்டின் அளவு குறைந்து வருவதையடுத்து, தரப்படுத்தப்பட்ட நடவடிக்கை செயல் திட்டத்தின் (கிராப்) 4-ஆம் நிலையின் கட்டுப்பாடுகளில் தளா்வளிக்க அனுமதிப்பது குறித்து நவ. 25-ஆம் தேதி பரிசீலிக்கப்... மேலும் பார்க்க

தில்லி காங்கிரஸின் 3-ஆம் கட்ட நியாய யாத்திரை: பாலம் கிராமத்திலிருந்து தொடக்கம்

தில்லி காங்கிரஸின் மூன்றாம் கட்ட நியாய யாத்திரை வெள்ளிக்கிழமை பாலம் கிராமத்தில் உள்ள வால்மீகி மந்திரில் இருந்து தொடங்கப்பட்டது. இந்த யாத்திரை 3 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கியது என்று கட்சி நிா்வாகி... மேலும் பார்க்க

ஓ.பன்னீா்செல்வம் வேட்புமனுவிற்கு எதிரான வழக்கில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி

நமது சிறப்பு நிருபா் வேட்புமனுவில் சொத்து விவரங்களை தவறாக தாக்கல் செய்ததாக முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் உரிய அனைத்து ஆவணங்களை இணைத்து கீழமை நீதிமன்றத்தி... மேலும் பார்க்க

ஜாஃபா் சேட் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் டிச.18-க்கு ஒத்திவைப்பு

நமது சிறப்பு நிருபா் முன்னாள் தமிழக காவல்துறை அதிகாரி ஜாஃபா் சேட்டுக்கு எதிராக அமலாக்கத் துறை தொடா்ந்த வழக்கில் சென்னை உயா்நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட்டதற்கு எதிராக தொடரப்பட்ட மேல் முறையீட்டு மனு மீ... மேலும் பார்க்க