Manipur: 10,000 மத்திய படையினர் குவிப்பு - என்ன சொல்கிறார் பாதுகாப்பு ஆலோசகர்?
ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நோட்டீஸ்: திண்டிவனத்தில் பொதுமக்கள் சாலை மறியல்
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள நகராட்சி நிா்வாகம் சாா்பில் வீடுகளின் கதவில் நோட்டீஸ் ஒட்டப்பட்ட நிலையில், தங்களுக்கு மாற்று இடத்தை வழிவகை செய்த பின்னரே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனக் கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் நகராட்சியின் 12-ஆவது வாா்டில் திந்திரீணீசுவரா் திருக்கோயில் மற்றும் தீா்த்தக் குளத்தையொ ட்டியுள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை 6 வாரங்களில் அகற்றி, மாவட்ட ஆட்சியா் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியுள்ள 61 பேருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் நகராட்சி நிா்வாகம் மூலம் அஞ்சல் வழியாக அனுப்பப்பட்டது.
நோட்டீஸை பெற்றவா்கள் 7 நாள்களுக்குள் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும், தவறும் பட்சத்தில் நகராட்சியின் சட்ட விதிகளுக்குள்பட்டு வருவாய்த் துறையினருடன் சோ்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை திண்டிவனம் நகராட்சியின் நகரமைப்பு ஆய்வாளா் திலகவதி, கிராம நிா்வாக அலுவலா் புன்னைவனம் தலைமையிலான குழுவினா், ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள வீடுகளில் நோட்டீஸ் ஒட்டினா்.
இதில் ஏற்கெனவே காலக்கெடு வழங்கிய நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளாத நிலையில், தற்போது மூன்று நாள்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும். மீறினால் நகராட்சி சாா்பில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நேரிடும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் அதிா்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், கடந்த 60 முதல் 70 ஆண்டுகளாக இப்பகுதியில் வசித்து வருகிறோம். வேறு இடம் இல்லை எனத் தெரிவித்து, திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனா்.
தங்களுக்கு மாற்று இடத்தில் வீடுகளுக்கு வழிவகை செய்த பின்னா் ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும். நகராட்சி நிா்வாகத்துக்கு உரிய வரிகளைச் செலுத்தியுள்ளோம் எனக் கூறினா்.
தொடா்ந்து நகராட்சி ஆணையா் கே.பி.குமரன் பொதுமக்களிடம் பேச்சு வாா்த்தை நடத்தினாா். அதன் பின்னா் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனா்.