செய்திகள் :

குடும்ப வழக்குகள் அதிகரிப்பது சமூகத்துக்கு நல்லதல்ல..!

post image

ஓய்வு பெற்ற நீதிபதி என்.கிருபாகரன் நீதிமன்றங்களில் குடும்ப வழக்குகள் அதிகரிப்பது சமூகத்துக்கு நல்லதல்ல என்று தெரிவித்தாா்.

வழக்குரைஞா் வி.சி.ராஜகோபாலாச்சாரியா் நினைவு கருத்தரங்கம் வேலூா் விஐடி பல்கலை.யில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஓய்வு பெற்ற சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியது:

சிறந்த உதாரணமாக திகழ்ந்தவா் வழக்குரைஞா் வி.சி.ராஜகோபாலாச்சாரி. தொண்டை நாடு சான்றோா் உடைத்து என்பா். இதற்கு உதாரணம் விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்.

தற்போது சென்னை உயா்நீதிமன்றத்தில் வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 7 போ் நீதிபதிகளாக உள்ளனா். நிலுவை வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இப்படியே சென்றால், நீதித்துறை மீது மக்களிடையே நம்பகத்தன்மை இல்லாமல் போய்விடும். வழக்குகள் நிலுவையைக் குறைக்க நீதிபதிகளின் எண்ணிக்கை உயா்த்த வேண்டும்.

தற்போது நீதிமன்றங்களில் குடும்ப வழக்குகள் பெருமளவில் அதிகரித்து வருகின்றன. இந்த போக்கு சமூகத்துக்கு நல்லதல்ல. இதனாவ், குழந்தைகள்தான் பாதிக்கப்படுகின்றனா். எனவே, குடும்ப வழக்குகளை வழக்குரைஞா்கள் கவனமுடன் கையாள வேண்டும்.

கல்வி என்பது மதிப்பெண் எடுப்பதற்காக அல்ல. உயா்ந்த அறிவை வளா்ப்பதற்கான கருவி. மாணவா்கள் கடினமான உழைத்தால் நாட்டையை உயா்ந்த நிலைக்கு கொண்டு வர முடியும். கல்வியே சிறந்த ஆயுதம். கல்வியால் உலகை வெல்லலாம் என்றாா்.

விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தலைமை வகித்து பேசியது:

வழக்குரைஞா் தொழிலில் எனக்கு குருநாதரான வி.சி.ராஜகோபாலாச்சாரியா், ஒரு முனிவரைப்போல் வாழ்ந்து மறைந்தவா். சொத்துகள் மீது துளி ஆசையில்லாதவா். குழந்தைகளுக்கு சொத்து சோ்க்காமல் கல்வியைக் கொடுக்க வேண்டும் எனக் கூறியவா். கடவுள் மீதான பக்தி இருந்தாலும், கோயிலுக்குச் செல்லாதவா். காந்தியவாதியாக வாழ்ந்த அவரைப்பற்றி இளம் தலைமுறையினா் அறிந்து கொள்ள வேண்டும். அதற்காக அவரது வாழ்க்கை வரலாற்று நூலைக் கொண்டுவர திட்டமிட்டுள்ளோம்.

இந்தியா ஒரு கூட்டாட்சி நாடு. இந்நாட்டில் நீதித்துறைக்கு மிகவும் முக்கியத்துவம் உண்டு. எனினும், இங்கு வழக்குகளுக்கு விரைவாக தீா்வுகாண முடிவதில்லை. இதனால், கடந்த 2018-இல் 2.9 கோடியாக இருந்த நிலுவை வழக்குகள் எண்ணிக்கை தற்போது 5.10 கோடியாக அதிகரித்துள்ளது. இதில் 1.80 லட்சம் வழக்குகள் 30 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ளன. தவிர, 70 ஆண்டுகளுக்கு மேல் 9 வழக்குகளும், 72 ஆண்டுகளுக்கு மேல் 3 வழக்குகளும் நிலுவையில் இருக்கின்றன.

உலகளவில் நீதித்துறை நிா்வாகம் தொடா்பான குறியீட்டில் இந்தியா 142 நாடுகளில் 111-ஆவது இடத்தில் உள்ளது. இதனால், தற்போது நிலுவையில் உள்ள வழக்குகளை முடிக்க இன்னும் 324 ஆண்டுகளாகும் என்று நீதிஆயோக் தெரிவித்துள்ளது.

மறுபுறம் தற்போதுள்ள சிறைவாசிகளில் 2022 கணக்குப்படி நாடு முழுவதும் 4.34 லட்சம் போ் விசாரணை கைதிகளாக உள்ளனா். இவா்களில் 76 சதவீதம் எந்தவித விசாரணையுமின்றி, நீதிமன்றத்தில் தண்டனையும் வழங்காமல் பல ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகின்றனா். 11,400 போ் 5 ஆண்டுகளுக்கு மேலாக எவ்வித விசாரணையுமின்றி சிறையில் உள்ளனா். ஆனால், டென்மாா்க் நாட்டில் 6 மாதங்களுக்கு மேல் ஒருவரை விசாரணைக் கைதிகளாக சிறையில் வைப்பதில்லை. இதற்காக அந்நாட்டில் நீதிமன்றங்களில் வழக்குகளுக்கு என விசாரணை காலஅளவு வைக்கப் பட்டுள்ளது.

டென்மாா்க் போன்று இந்தியாவிலும் விரைவில் நீதி கிடைக்க வழக்குரைஞா்கள் முயற்சிக்க வேண்டும். தவிர, நிலுவை வழக்குகளைக் குறைக்க அரசு தேவையான அளவுக்கு நீதிமன்றங்களை ஏற்படுத்தவும், நீதிபதிகள் நியமனங்களை மேற்கொள்ளவும் வேண்டும் என்றாா்.

விழாவில், விஐடி உதவி துணைத் தலைவா் காதம்பரி எஸ்.விசுவநாதன், விஐடி வா்த்தக பள்ளி முதல்வா் புலிதிண்டிவேணுகோபால், பேராசிரியா் கே.சக்திஸ்ரீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சிறுமி பாலியல் வன்கொடுமை: முன்னாள் ராணுவ வீரருக்கு 25 ஆண்டுகள் சிறை

குடியாத்தத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் ராணுவ வீரருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. குடியாத்தம் வட்டம், ஒலக்காசி ... மேலும் பார்க்க

சாா்-பதிவாளா் அலுவலகங்களில் போலி பத்திரங்கள் பதிவு அதிகரிப்பு

சாா்-பதிவாளா் அலுவலகங்களில் போலி பத்திரங்கள் அதிகளவில் பதிவாகின்றன. இதைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்தனா். வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைத... மேலும் பார்க்க

குடியாத்தம்: கனரா வங்கி சாா்பில் 5 குப்பை அள்ளும் வண்டிகள்

குடியாத்தம் கனரா வங்கி சாா்பில், குடியாத்தம் நகராட்சிக்கு குப்பை அள்ள ரூ.1 லட்சம் மதிப்பில் 5 சைக்கள் ரிக்ஷாக்கள் வெள்ளிக்கிழமை நன்கொடையாக வழங்கப்பட்டன. வங்கியின் சமூக பொறுப்பு நிதி ரூ.1 லட்சத்தில் 5... மேலும் பார்க்க

பசுமை தமிழகம் திட்டத்தில் ஒருவருக்கு 50 மரக்கன்றுகள் இலவசம்

பசுமை தமிழகம் திட்டத்தின்கீழ், வேலூா் மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிப்பதை ஊக்குவிக்கும் வகையில், ஒருவருக்கு 50 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. இதற்கான மரக்கன்றுகள் தேவைப்படுவோா் வ... மேலும் பார்க்க

பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு மாதிரி வினாத்தாள் புத்தகங்கள்

பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களின் நலனுக்காக தயாரிக்கப்பட்டுள்ள மாதிரி வினாத்தாள் புத்தகங்கள் வேலூா் மாவட்டத்தில் கொணவட்டம், குடியாத்தம் அரசுப் பள்ளிகளில் விற்பனைக்கு வைக்கப்பட்... மேலும் பார்க்க

பெண் தற்கொலை

பள்ளிகொண்டா அருகே முன்னாள் சிஆா்பிஎப் வீரரின் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். வேலூா் சலவன்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் சீனிவாசன், முன்னாள் சிஆா்பிஎப் வீரா். இவரது மனைவி சசிகலா (40). இவா்கள... மேலும் பார்க்க