வெற்றி உறுதி: மகாராஷ்டிரத்தில் பெரும்பான்மை இடங்களில் பாஜக முன்னிலை
வரத்து அதிகரிப்பு: நீலகிரி பூண்டு விலை குறைந்தது
ஹிமாசல பிரதேசத்தில் இருந்து பூண்டு வரத்து அதிகரித்துள்ளதால் நீலகிரி மலைப் பூண்டின் விலை மீண்டும் குறையத் தொடங்கியுள்ளது.
மத்திய பிரதேசம், குஜராத், ஹிமாசல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு அதிக அளவில் பூண்டு விற்பனைக்கு வருகிறது. இந்நிலையில், கடந்த வாரம் வெளிமாநிலங்களில் இருந்து பூண்டு வரத்து இல்லாததால் நீலகிரி மலைப் பூண்டின் விலை கிலோ ரூ.600 வரை அதிகரித்து விற்பனையானது.
தற்போது, ஹிமாசல பிரதேசத்தில் இருந்து தமிழகத்தில் உள்ள மண்டிகளுக்கு மீண்டும் பூண்டு வரத்து தொடங்கியுள்ளது. இதனால் நீலகிரி மலைப் பூண்டின் விலை பாதியாக குறைந்து கிலோ ரூ.350-க்கு விற்பனையாகி வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளான கூக்கல்தொரை, கோ்கம்பை, கப்பட்டி, கட்டபெட்டு, தொட்டன்னி ஆகிய பகுதிகளில் ஏற்கெனவே பயிரிடப்பட்டிருந்த பூண்டை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா்.