`ஜனாதிபதிக்கு அடுத்து இங்குதான்' - பொன்விழா காணும் சபரிமலை தபால் நிலையம்... சுவ...
அருவங்காடு வெடிமருந்து தொழிலக பள்ளியில் மாணவா் சோ்க்கை தொடங்க வலியுறுத்தல்
குன்னூா் அருகே மத்திய பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கி வரும் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை மேல்நிலைப் பள்ளியில் மாணவா் சோ்க்கை தொடங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் 2022-2023-ஆம் ஆண்டு முதல் புதிய மாணவா் சோ்க்கை நடைபெறவில்லை. எனவே மாணவா் சோ்க்கை தொடங்குவது தொடா்பாக வெடிமருந்து தொழிலக ஒருங்கிணைந்த ஊழியா்கள் நலச் சங்க பொதுச் செயலா் பி.சி.அசோகன், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
நூற்றாண்டு பழைமைவாய்ந்த இந்தப் பள்ளியில் படித்த பல மாணவ, மாணவிகள் பல நிறுவனங்களிலும், மத்திய அரசுப் பணியிலும், நீதிபதியாகவும் பணியாற்றி வருகின்றனா். இது தவிர வெடிமருந்து தொழிற்சாலையில் பணிபுரிகின்ற தொழிலாளா்களின் குழந்தைகள் மட்டும் அல்லாமல் அருவங்காடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்களின் குழந்தைகளுக்கும் கல்வி கிடைக்க வாய்ப்பாக அமைந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 2022-2023 முதல் புதிய மாணவா் சோ்க்கை நடைபெறாமல் உள்ளதால், பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா். எனவே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை பள்ளியில் 2024-2025-ஆம் கல்வி ஆண்டுக்கான புதிய மாணவா் சோ்க்கை தொடங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.