செய்திகள் :

நிஜ்ஜார் கொலை: மோடியை தொடர்புபடுத்தும் செய்தியை மறுத்த கனடா அரசு!

post image

சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய பிரதமர் மோடியை தொடர்புபடுத்தும் வகையில் வெளியான ஊடக செய்தியை கனடா அரசு மறுத்துள்ளது.

கனடாவை சேர்ந்த பிரபல செய்தி நிறுவனம் ஒன்று, நிஜ்ஜார் கொலை வழக்கில் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு தொடர்பு இருப்பதாக செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

கனடா அரசு மறுப்பு

கனடா ஊடக செய்தியை மறுத்து அந்நாட்டு பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நதாலி ஜி ட்ரூயின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“கடந்த அக்டோபர் 14ஆம் தேதி, கனடாவில் இந்திய தூதரக அதிகாரிகள் மீது கனடா காவல்துறையினர் பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

ஆனால், பிரதமர் மோடி, அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை இந்த குற்றச் செயல்களுடன் தொடர்புபடுத்தி கனடா அரசு எதுவும் கூறவில்லை. அதற்கான ஆதாரங்களும் இல்லை.

இதற்கு எதிர்மாறாக வெளியாகும் அனைத்து செய்திகளும் தவறானவை” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : உக்ரைனுக்கு ஏவுகணை வழங்கும் நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்படும்: ரஷிய அதிபர்

இந்தியா கண்டனம்

கனடா பத்திரிகை செய்தியை தொடர்ந்து, இந்தியா - கனடா இடையேயான உறவு மேலும் சேதப்படுத்தும் வகையில் உள்ளதாக வெளியுறவுத் துறை புதன்கிழமை தெரிவித்திருந்தது.

வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்வால் பேசியதாவது:

“பொதுவாக ஊடகங்களில் வரும் செய்திகளுக்கு நாங்கள் கருத்து தெரிவிப்பதில்லை. எனினும், கனடா அரசு தகவல் என்று ஒரு நாளிதழ் குறிப்பிடும்போது, அதனை கண்டித்து நிராகரிக்க வேண்டும்.

இதுபோன்ற அவதூறு பரப்புரைகள், ஏற்கெனவே சிதைந்து கிடக்கும் நமது உறவுகளை மேலும் சேதப்படுத்துகிறது” எனத் தெரிவித்தார்.

கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம், கொலம்பியாவில் கனடாவைச் சேர்ந்த சீக்கிய பிரிவினைவாதி என்று இந்தியாவால் அடையாளப்படுத்தப்பட்ட ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலையில் இந்திய அரசின் பங்கு இருப்பதற்கான நம்பகமான ஆதாரங்கள் கனடாவிடம் இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஆண்டு முதலே கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

ஒரு ப்ரெட் பாக்கெட் ரூ. 1100-க்கு விற்கப்படும் அவலம்! இஸ்ரேல் போரால் காஸாவில் கடும் பஞ்சம்!!

இஸ்ரேலின் தாக்குதலால் காஸாவில் லட்சக் கணக்கானோர் வறுமையில் தவித்து வருவதாக காஸா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸா மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் காஸாவின் பல பகுதிகளில் பசியிலும், வறுமைய... மேலும் பார்க்க

இலங்கையிலும் அதானி ஒப்பந்தம் ரத்து செய்ய வாய்ப்பு?

தொழிலதிபர் கெளதம் அதானி மீது அமெரிக்க நீதிமன்றதில் தொடரப்பட்டுள்ள நிலையில், மன்னார் காற்றாலை மின் உற்பத்தித் திட்ட ஒப்பந்தத்தை இலங்கை அரசு ரத்து செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.சூரிய ஒளி ... மேலும் பார்க்க

இந்தியாவுடனான உறவு அதானி விவகாரத்தை தொடர உதவும்! வெள்ளை மாளிகை

அமெரிக்கா - இந்தியாவுக்கு இடையேயான வலுவான உறவு அதானி மீதான குற்றச்சாட்டை தொடர்ந்து வழிநடத்த உதவும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக ரூ. 2,100 கோடி... மேலும் பார்க்க

உக்ரைனுக்கு ஏவுகணை வழங்கும் நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்படும்: ரஷிய அதிபர்

ரஷியா மீது தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு ஏவுகணை வழங்கும் நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.ரஷியா - உக்ரைன் இடையேயான போர் 1,000 நாள்களை க... மேலும் பார்க்க

‘ஐசிபிஎம்’ ஏவுகணை மூலம் ரஷியா தாக்குதல்

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ஐசிபிஎம்) மூலம் ரஷியா தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் கூறியுள்ளது. 1,000 நாள்களுக்கும் மேல் நடந்துவரும் இந்தப் போரில் ஐசிபிஎம் ரக ஏவுகணை பயன்படுத்தப்பட்டதா... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: பயங்கரவாதத் தாக்குதலில் 50 போ் உயிரிழப்பு

பாகிஸ்தானில் வாகனங்களில் சென்று கொண்டிருந்தவா்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 50 போ் உயிரிழந்தனா்; 20 போ் காயமடைந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: பதற்றம் நிறைந்த கைபா் ... மேலும் பார்க்க