`நாம் ஒற்றுமையாக இருக்கணும்' - மோதிக்கொண்ட கட்சி நிர்வாகிகள்; அறிவுறுத்திய வேலு...
KL Rahul: 'சொதப்பிய 3rd அம்பயர்; ஏமாற்றப்பட்டாரா கே.எல்.ராகுல்?' - என்ன நடந்தது?
ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையேயான பார்டர் கவாஸ்கர் தொடர் பெர்த்தில் தொடங்கியிருக்கிறது. முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 51-4 என திணறி வருகிறது. கொஞ்சம் நன்றாக ஆடிக்கொண்டிருந்த கே.எல்.ராகுல் எட்ஜ் ஆகி கேட்ச் ஆகியிருந்தார். ஆனால், அவருக்கு வழங்கப்பட்ட அவுட் முடிவு இப்போது சர்ச்சையாகி வருகிறது.
இந்திய அணியின் கேப்டனான பும்ராதான் டாஸை வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆனால், ஆரம்பத்திலிருந்தே இந்திய அணி தடுமாறிக் கொண்டிருந்தது. டாப் 3 வீரர்களில் இருவர் டக் அவுட் ஆகினர். யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஸ்டார்க்கின் பந்தில் அவசரப்பட்டு ட்ரைவ் ஆட முயன்று அவுட் ஆனார். படிக்கல் க்ளூவே இல்லாமல் 22 பந்துகளை ஆடி ஒரு ரன்னை கூட எடுக்காமல் எட்ஜ் ஆகி அவுட் ஆனார். அனுபவ வீரரான கோலி ஹேசல்வுட்டின் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் பந்துக்கு இரையானார். கே.எல்.ராகுல் மட்டும்தான் நின்று நிதானமாக ஆடினார். பேட்டை விடாமல் ஏதுவான பந்துகளை மட்டுமே அடித்து ஆடியிருந்தார். 70 பந்துகளை கடந்து நின்று நன்றாக ஆடிக்கொண்டிருந்தார். ரவி சாஸ்திரி ராகுலை புஜாராவுடனெல்லாம் ஒப்பிட்டு பேசிக்கொண்டிருந்தார். இந்நிலையில்தான் ஸ்டார்க் வீசிய 23 வது ஓவரில் ராகுல் எட்ஜ் ஆகினார்.
நடுவர் அவுட் கொடுக்கவில்லை. கம்மின்ஸ் அப்பீலுக்கு சென்றார். மூன்றாவது நடுவர் ஆய்ந்து பார்த்து அவுட்டை கொடுத்துவிட்டார். கே.எல்.ராகுல் இதில் கடும் அப்செட். ஏனெனில் அவரைப் பொறுத்தவரைக்கும் பந்து பேட்டில் உரசவே இல்லை. பேட்தான் பேடில் உரசியது என்று நம்பினார்.
அவர் வெளியேறிய பிறகு ரீப்ளேக்களில் பார்க்கும்போதும் பேட்தான் பேடில் உரசியிருப்பது தெரிய வந்தது. ஆனாலும் நடுவர் ஸ்நிக்கோ மீட்டரில் வந்த ஸ்பைக் பேட்டில் பந்து உரசி வந்ததுதான் என நினைத்து அவுட் கொடுத்தார். இதை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
'நீங்கள் அலசி ஆய்ந்து பார்க்க நிறைய ஆங்கிள்கள் இருக்கும்போது அவசரப்பட்டு முடிவை அறிவிக்கக்கூடாது. அதிலும், களநடுவரின் முடிவுக்கு எதிரான தீர்ப்பை வழங்குகையில் கவனமாக இருக்க வேண்டும்.' என ஹர்ஷா போக்ளே ட்வீட் செய்திருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...