செய்திகள் :

Asia Cup : `சென்னையில் சர்வதேச கூடைப்பந்து போட்டி; களமிறங்கும் இந்தியா!' - விவரம் என்ன?

post image
ஆசியக்கோப்பை கூடைப்பந்துப் போட்டிக்கான தகுதிச்சுற்று சென்னையில் வருகிற 22 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடக்கவிருக்கிறது.

சென்னையில் முதன்முறையாக சர்வதேச ஆண்கள் கூடைப்பந்து போட்டி நடக்கவிருக்கிறது. இதனைத் தொடர்ந்து இந்த தகுதிச்சுற்றைப் பற்றிய பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்திருந்தது.

Aadhav Arjun

இதில் இந்திய கூடைப்பந்து வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் ஆகியோருடன் இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவரான ஆதவ் அர்ஜூனாவும் கலந்துகொண்டார். நிகழ்வில் அவர் பேசுகையில், 'தமிழ்நாடு எப்போதுமே கூடைப்பந்தில் பிரபலமான மாநிலமாகவே இருந்திருக்கிறது. தேசியளவில் நடக்கும் போட்டிகளைக் காணவே இங்கே ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுவார்கள். அப்படியிருக்கையில் ஒரு சர்வதேசப் போட்டி இங்கே நடக்கிறது எனும் போது மக்கள் மத்தியில் இன்னும் வரவேற்பு அதிகமாக இருக்கும். குழந்தைகளும் கூடைப்பந்தைப் பற்றி அறிந்து ஊக்கம் பெற உதவும்.

அமெரிக்காவிலிருந்து NBA அனுபவமுடைய ஸ்காட் ப்ளெம்மிங் என்கிற பயிற்சியாளரை இந்திய அணிக்கு பயிற்சியளிக்க அழைத்து வந்திருக்கிறோம். பெண்கள் அணிக்கும் ஒரு அமெரிக்க பயிற்சியாளரை விரைவிலேயே நியமிக்கவிருக்கிறோம். அடிப்படையிலிருந்தே கட்டமைப்புகளை வலுப்படுத்தும்போது வீரர்களால் விளையாட்டில் நல்ல நிலையை எட்ட முடியும். எங்களுக்கு அரசும் போதுமான ஒத்துழைப்பை வழங்குகிறது. ஆசியக்கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டிகளை தொடங்கி வைக்க அமைச்சரையும் அழைத்திருக்கிறோம். சிறப்பான நிகழ்வாக இதை நடத்தி முடிக்க அத்தனை ஏற்பாடுகளையும் செய்திருக்கிறோம்.' என்றார்.

Basketball Team

நவம்பர் 22 ஆம் தேதி கத்தாருக்கு எதிராகவும் 25 ஆம் தேதி கஜகஸ்தானுக்கு எதிராகவும் இந்தியா மோதுகிறது. இந்திய அணியில் 5 தமிழக வீரர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். இந்தப் போட்டிகள் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கவிருக்கிறது. பார்வையாளர்களுக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

Sports Vikatan's Mock Auction : 'சென்னை அணி வாங்கிய அந்த 3 வீரர்கள்!' | Mega Mock Auction Part 2

ஐ.பி.எல் மெகா ஏலத்தை முன்னிட்டு ஸ்போர்ட்ஸ் விகடன் சார்பில் ஒரு Mock Auction நிகழ்வை நடத்தியிருந்தோம். ஏற்கனவே, 2022 ஆம் ஆண்டில் தமிழகத்திலேயே முதல் முறையாக 'Mock Auction' என்பதை அறிமுகப்படுத்தி விகடன்... மேலும் பார்க்க

ரஃபேல் நடால்… இது காயங்கள் நிறைந்த காதல் கதை! | Rafael Nadal

நடால் எனும் மாபெரும் சகாப்தம்ரஃபேல் நடால் எனும் மாபெரும் சகாப்தம் முடிவுக்கு வந்திருக்கிறது. டேவிஸ் கோப்பை தோல்விக்குப் பிறகு அவர் ஓய்வு பெற்றுவிட, ஒட்டுமொத்த டென்னிஸ் உலகமும் ஸ்தம்பித்து நிற்கிறது. இ... மேலும் பார்க்க

ஈரோடு: மாநில அளவிலான ஓட்டப்பந்தயம்; தங்கம் வென்று அசத்திய சகாய ஜெமிமா!

தமிழ்நாடு அரசின் சார்பில் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற 17 வயதுக்கு உட்பட்ட மாணவியருக்கான ஓட்டப்பந்தய போட்டியில் தூத்துக்குடி மாவட்டம், T.சவேரியார்புரத்தை சேர்ந்த சகாய ஜெமிமா என்ற பத்தாம் வகுப்பு மாணவி ... மேலும் பார்க்க

Sports Vikatan's Mock Auction : மல்லுக்கட்டும் அணிகள்; ரிஷப் பண்ட் எவ்வளவுக்கு வாங்கப்பட்டார்?

ஐ.பி.எல் மெகா ஏலத்தை முன்னிட்டு ஸ்போர்ட்ஸ் விகடன் சார்பில் ஒரு Mock Auction நிகழ்வை நடத்தியிருந்தோம். ஏற்கனவே, 2022 ஆம் ஆண்டில் தமிழகத்திலேயே முதல் முறையாக 'Mock Auction' என்பதை அறிமுகப்படுத்தி விகடன்... மேலும் பார்க்க

IPL Auction: 'MI-யின் தலையெழுத்தை மாற்றிய அந்த 8 நிமிடங்கள்; ரோஹித் மும்பையின் ராஜாவான கதை' Rewind

ரோஹித் சர்மாவை `மும்பை கா ராஜா’ என மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மும்பை அணிக்கு இப்போது அவர் கேப்டன் இல்லை. ஆனாலும் என்ன பரவயில்லை. இப்போதும் அவர்களின் 'மும்பை கா ராஜா' ரோஹித்தான்.... மேலும் பார்க்க

IPL Mega Auction:'டெல்லியின் கோலியை பெங்களூருவுக்கு எப்படி கடத்தினார் மல்லையா?' - Auction Rewind 2

ஐ.பி.எல் இன் 18 வது சீசனுக்கு முன்பான மெகா ஏல சமயத்தில் நிற்கிறோம். கடந்த 17 ஆண்டுகளில் ஐ.பி.எல் இல் மாறவே மாறாத ஒரே ஒரு விஷயம் என்ன தெரியுமா? விராட் கோலிதான். கடந்த 17 ஆண்டுகளில் அவர் பெங்களூரு அணிக்... மேலும் பார்க்க