செய்திகள் :

IPL Auction: 'MI-யின் தலையெழுத்தை மாற்றிய அந்த 8 நிமிடங்கள்; ரோஹித் மும்பையின் ராஜாவான கதை' Rewind

post image
ரோஹித் சர்மாவை `மும்பை கா ராஜா’ என மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மும்பை அணிக்கு இப்போது அவர் கேப்டன் இல்லை. ஆனாலும் என்ன பரவயில்லை. இப்போதும் அவர்களின் 'மும்பை கா ராஜா' ரோஹித்தான். 5 முறை கோப்பைகளை வென்று கொடுத்தவரை அத்தனை எளிதில் ரசிகர்கள் அந்த அரியாசனத்திலிருந்து இறக்கிவிடுவார்களா என்ன? அப்படிப்பட்ட ரோஹித் மும்பை அனிக்குள் எப்படி வந்தார் தெரியுமா?
Rohit Sharma

ரோஹித் சர்மா இதுவரைக்கும் இரண்டு அணிகளுக்காக ஐ.பி.எல் இல் ஆடியிருக்கிறார். 2008 லிருந்து 2010 வரைக்கும் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக ஆடியிருந்ந்தார். 2009 இல் அந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்த போது 350+ ரன்களை அந்த சீசனில் அடித்திருந்தார். கூடவே 11 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக்கிறார். ரோஹித் சர்மா பௌலிங் செய்து விக்கெட்டா என ஆச்சர்யமாக கேட்பவர்களுக்கு இன்னொரு அதிர்ச்சியையும் சொல்கிறேன் கேளுங்கள். அவர் அந்த 2009 சீசனில் ஒரு ஹாட்ரிக் கூட எடுத்திருந்தார். முதல் மூன்று சீசன்களிலும் தவிர்க்க முடியாத செயல்பாட்டை கொடுத்த போதிலும் டெக்கான் சார்ஜர்ஸ் அணி அவரை தக்கவைக்காமல் விடுவித்தது.

2011 சீசனுக்கு முன்பான ஏலத்தில் ரோஹித் சர்மாவின் பெயரும் இடம்பெற்றிருந்தது. இந்த 2011 காலக்கட்டம் ரோஹித்தின் கரியரில் முக்கியமான காலக்கட்டம். உலகக்கோப்பைக்கான அணியில் ரோஹித் சர்மாவுக்கும் இடம் இருக்கும் என நம்பப்பட்டது. ஆனால், தோனி ரோஹித் சர்மாவுக்கு பதில் பியூஸ் சாவ்லாவுக்கு உலகக்கோப்பையில் வாய்ப்பு கொடுத்தார். இது ரோஹித்தை ரொம்பவே வருத்தப்பட வைத்தது. என்னுடைய கரியரின் மிகப்பெரிய பின்னடைவு இதுவென ரோஹித் மனம் வருந்தி ட்வீட்டெல்லாம் செய்திருந்தார். ஆனால், இதே காலக்கட்டத்தில்தான் அரியாசனத்தை நோக்கிய ரோஹித்தின் பயணமும் தொடங்கியது.

2011 இல் பெங்களூருவில் ஜனவரி 8, 9 நடந்த மெகா ஏலத்தில் 8 ஆம் தேதி மதியம் 12:18 - 12:26 இந்த 8 நிமிடங்களை மும்பை அணியால் எப்போதுமே மறக்க முடியாது. இந்த 8 நிமிடங்களில்தான் டெக்கான் சார்ஜர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளுடன் போட்டியிட்டு ரோஹித்தை மும்பை இந்தியன்ஸ் அணி 9.2 கோடி ரூபாய்க்கு அள்ளி வந்தது.

ரோஹித்தை மும்பை இந்தியன்ஸ் வாங்கிய சமயத்தில் மற்ற அணிகள் செய்த கமெண்ட்களையுமே அவருடைய ரசிகர்கள் என்றைக்கும் மறக்கமாட்டார்கள். சென்னை அணி வெளிப்படையாகவே ரோஹித்தை ஏலத்தில் எடுக்கப்போவதில்லை என ட்வீட் செய்தது. கொல்கத்தா அணி ரோஹித்துக்கு இவ்வளவு தொகையா என கிண்டல் தொனிக்கும் வகையில் வாயை பிளந்து ஒரு ட்வீட்டை செய்திருந்தது. மும்பை அணியின் கொடியை உச்சத்தில் பறக்கவிடப்போகும் ராஜா ரோஹித்தான் என்பதை அப்போது எந்த அணியும் உணர்ந்திருக்கவில்லை.

Sachin

மும்பை அணியே இரண்டரை சீசன்கள் கழித்துதான் ரோஹித்துக்கு கேப்டன்சியை கொடுத்தது. 2013 சீசனுக்கு முன்பாக ரிக்கி பாண்டிங் ஐ.பி.எல் க்கு மீண்டும் வந்தார். அதற்கு முன் 2008 சீசனில் மட்டும்தான் ரிக்கி பாண்டிங் ஆடியிருந்தார். சர்வதேசப் போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டி இடைப்பட்ட ஆண்டுகளில் ஆடாமல் இருந்தார். 2013 வாக்கில் அவர் சர்வதேசப் போட்டிகளில் ஓய்வு பெற்றுவிட்டதால் மீண்டும் ஐ.பி.எல் க்கு வந்தார். மினி ஏலத்தில் அவரை 2.1 கோடி ரூபாய் கொடுத்து மும்பை வாங்கியது. சச்சின், ஹர்பஜனை தொடர்ந்து ரிக்கி பாண்டிங்கை தங்கள் அணியின் கேப்டனாக மாற்றியது. பெரிய அணியாக இருந்தும் தங்களால் கோப்பையை வெல்ல முடியவில்லையே எனும் ஏக்கம் மும்பைக்கு இருந்தது. அந்த ஏக்கத்தை ஆஸ்திரேலிய அணியின் வெற்றிகரமான கேப்டனாக இருந்த ரிக்கி பாண்டிங் போக்குவார் என மும்பை நிர்வாகம் எண்ணியது. ஆனால், எதிர்பார்க்கவே செய்யாத அளவுக்கு அந்த முடிவு பேரழிவாக அமைந்தது. 2013 சீசனில் பாண்டிங் கேப்டனாக இருந்த முதல் 6 போட்டிகளில் 3 போட்டிகளை மும்பை இழந்தது. குறிப்பாக, ஓப்பனிங் இறங்கிய ரிக்கி பாண்டிங் 6 போட்டிகளில் 52 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார்.

தனக்கு ரிதம் செட் ஆகவில்லை என்பதை உணர்ந்து சீசனுக்கு இடையிலேயே ரிக்கி பாண்டிங் ஒதுங்கினார். வருங்காலத்தை மனதில் வைத்து புதிய கேப்டனாக ரோஹித்தை மும்பை அணி தேர்ந்தெடுத்தது. மும்பை அணியின் போக்கு அப்படியே மாற தொடங்கியது. சச்சினாலும் பாண்டிங்காலும் செய்ய முடியாததை ரோஹித் செய்தார். மும்பை அணியை முதல் முறையாக அந்த சீசனிலேயே சாம்பியனாக்கினார். தனிப்பட்ட முறையில் அவரும் 500+ ரன்களை எடுத்திருந்தார். பேட்டராக அவரின் ஆகச்சிறந்த சீசன் அதுதான். வெறுமையாக இருந்த மும்பையின் அரியாசனத்தில் ரோஹித்தை ராஜாவாக தூக்கி அமர வைத்தனர் மும்பை ரசிகர்கள்.

Rohit Sharma

மேலும், 2015, 2017, 2020, 2022 என சீசன்களை வெல்ல வைத்து கூடுதலாக 4 கோப்பைகளை தன்னுடைய மும்பை அணிக்காக வென்று கொடுத்து ஐ.பி.எல் இன் தலைசிறந்த கேப்டனாக உருவெடுத்தார். இந்திய அணிக்கு டி20 உலகக்கோப்பையை வென்று கொடுக்கவும் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவம்தான் ரோஹித்துக்கு உதவியது. மெகா ஏலத்தில் சமயோஜிதமாக மும்பை அணி செலவிட்ட அந்த 8 நிமிடங்கள்தான் ரோஹித் மூலம் அந்த அணிக்கென தனி சகாப்தத்தை உருவாக்கிக் கொள்ள காரணமாக இருந்தது. எந்த மும்பை அணி ரோஹித்தை கேப்டனாக்கி அழகு பார்த்ததோ அதே மும்பை அணி இப்போது ரோஹித்தை கேப்டன் பதவியிலிருந்து ஓரங்கட்டியிருக்கிறது. ரோஹித் எதை இழந்தாலும் 'மும்பை கா ராஜா' எனும் பட்டத்தை மட்டும் அவரிடமிருந்து ரசிகர்கள் இறங்கவே விடமாட்டார்கள் என்பதுதான் நிதர்சனம்.!

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/UlagaiMaatriyaThalaivargal

IPL Mega Auction:'டெல்லியின் கோலியை பெங்களூருவுக்கு எப்படி கடத்தினார் மல்லையா?' - Auction Rewind 2

ஐ.பி.எல் இன் 18 வது சீசனுக்கு முன்பான மெகா ஏல சமயத்தில் நிற்கிறோம். கடந்த 17 ஆண்டுகளில் ஐ.பி.எல் இல் மாறவே மாறாத ஒரே ஒரு விஷயம் என்ன தெரியுமா? விராட் கோலிதான். கடந்த 17 ஆண்டுகளில் அவர் பெங்களூரு அணிக்... மேலும் பார்க்க

IPL Mega Auction: 'இந்தியா சிமெண்ட்ஸ் Vs ரிலையன்ஸ்' தோனியை CSK வாங்கிய கதை | 2008 Auction Rewind - 1

தோனி, இன்றைய தேதிக்கு இந்திய விளையாட்டுலகம் இதற்கு முன் கொண்டாடிடாத அளவுக்கு கொண்டாடப்படும் மாபெரும் வீரர். ஐ.பி.எல் என்கிற ஒரு கிரிக்கெட் லீகே அவரை நம்பியிருக்கிறது. அவருக்காக லீகின் விதிகளையே மாற்றி... மேலும் பார்க்க

Gambhir: 'இந்தியாவை விமர்சிக்க பாண்டிங் யார்?!' - கம்பீரின் கோபம் நியாயமானதா?

ஆஸ்திரேலியா புறப்பட்டு செல்வதற்கு முன்பு இந்திய அணியின் பயிற்சியாளார் கம்பீர் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அதில் ரிக்கி பாண்டிங் முன்வைத்த ஒரு விமர்சனம் பற்றிய கேள்விக்கு கம்பீர் அளித்த பதில் ... மேலும் பார்க்க

SAvInd : 'வீணான வருண் சக்கரவர்த்தியின் அசாத்திய பௌலிங்!' - தோல்விக்கு காரணமான அந்த 3 விஷயங்கள்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்ந்திருக்கிறது. முதல் போட்டியில் மிகச்சிறப்பாக ஆடி வென்ற நிலையில் இரண்டாம் போட்டியில் இந்தியா எங்கே சொத... மேலும் பார்க்க

Ashwin: 'இந்தியாவை விட நியூசிலாந்து தகுதியான அணியாக இருந்தது!' - ஒயிட் வாஷ் பற்றி அஷ்வின்!

நியூசிலாந்துக்கு எதிரான உள்ளூர் டெஸ்ட் தொடரை 0-3 என தோற்று ஒயிட் வாஷ் ஆகியிருக்கிறது இந்திய அணி. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே உள்ளூரில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளில் இந்திய அணி ஒயிட் வாஷ் ஆவத... மேலும் பார்க்க