ஐபிஎல் மெகா ஏலத்தில் கலந்துகொள்ளும் வீரர்கள் பட்டியல் வெளியீடு!
நசாரா டெக்னாலஜிஸ் இரண்டாம் காலாண்டு லாபம் 33% சரிவு!
புதுதில்லி: உள்நாட்டு கேமிங் மற்றும் ஸ்போர்ட்ஸ் மீடியா நிறுவனமான நசாரா டெக்னாலஜிஸ், ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலாண்டில், அதன் நிகர லாபம், 33 சதவிகிதம் சரிந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.24.18 கோடியாக இருந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம், 2025ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ரூ.16.24 கோடியாக அதிகரித்துள்ளது.
இதன் லாபம் ரூ.23.62 கோடியிலிருந்து 31 சதவிகிதம் குறைந்துள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே வேளையில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.297.24 கோடியிலிருந்து 7 சதவிகிதம் அதிகரித்து ரூ.318.94 கோடியானது.
கேமிங் நிறுவனம், இடைநிறுத்தப்பட்ட செயல்பாடுகளால் ரூ.1.86 கோடி நஷ்டத்தைச் சந்தித்துள்ள நிலையில், அதன் முந்தைய ஆண்டு காலாண்டு லாபம் ரூ.1.68 கோடியாக இருந்தது.
நிறுவனத்தின் மொத்த செலவினம் 11 சதவீதம் உயர்ந்து ரூ.321.27 கோடியாக உள்ளது என்று அதன் நிதிநிலை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.