Inbox 2.0 : Eps 10 - பலத்த காயங்களுடன் பத்தாவது நாளில்! | Cinema Vikatan
மோசமான விமர்சனங்கள்..! திரையரங்கில் ஒலியை குறைக்க கங்குவா படக்குழு முடிவு!
நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் நேற்று (நவ.14) பிரம்மாண்டமாக வெளியானது.
தென்னிந்தியளவில் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் அதிக திரைகளில் வெளியிட உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்தது.
தமிழகத்தில் 800 திரைகளிலும் வட இந்தியாவில் 3500 திரைகளென இந்தியளவில் 6000 திரைகள் உள்பட உலகளவில் 10,000 திரைகளில் கங்குவா வெளியானது.
முதல்நாளில் ரூ.26 கோடி வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றன. குறிப்பாக திரையரங்குகளில் சப்தம் அதிகமாக இருந்ததாக பலரும் சமூக வலைதளங்களில் மோசமாக விமர்சித்து வந்தனர்.
இந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா திரையரங்குகளில் ஒலியை 2 புள்ளிகள் குறைவாக வைக்கும்படி கூறியதாகவும் இது இசையமைப்பாளர் தவறில்லை ஒலிக் கலவையில் ஏற்பட்ட பிரசனை என்றும் இன்றுமுதல் அது சரிசெய்யப்பட்டதெனவும் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் தயாரிப்பாளர், “முதல் 20 நிமிடங்கள் மட்டுமே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மற்றபடி எந்தக் குறையும் பொதுமக்களிடம் இருந்து வரவில்லை” எனக் கூறியுள்ளார்.