Siragadikka Aasai : `அது கனவு மாதிரிதான் இருந்தது!' - நெகிழும் பாக்யலட்சுமி
சிறக்கடிக்க ஆசை தொடர் 500 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த வெற்றியைக் கொண்டாட `சிறக்கடிக்க ஆசை' குடும்பத்தினர் அனைவரையும் ஒருங்கிணைத்தோம். இயக்குநர், ஒளிப்பதிவாளர் என கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் சீரியல் தொடர்பாக சுவாரஸ்யமான பல விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.
பார்வதி கதாபாத்திரத்தில் நடிக்கும் பாக்யலட்சுமி பேசுகையில், `` சிறகடிக்க ஆசை சீரியல் என்னுடைய இரண்டாவது இன்னிங்ஸ்னு சொல்லலாம். இதோட வாய்ப்பு எனக்கு அதிர்ஷ்டவசமாக கிடைத்தது. இந்த சீரியலோட ஆடிஷனுக்கு என்னால் போக முடியல. அதன் பிறகு இந்த மாதிரி ஒரு கதாபாத்திரம்னு சொன்னதும் ஷூட்டிங்ல போய்தான் இயக்குநரை சந்திச்சேன். நானும் சின்ன ஒரு இடைவெளி எடுத்துட்டு சீரியல் பக்கம் வந்திருக்கிறேன். அப்படி பயத்தோட குமரன் சாரை பார்க்கிறதுக்கு காத்திட்டு இருந்தேன். சார் வந்ததும் உடனடியாக என்னை பார்த்துட்டு இந்த மாதிரியான கதாபாத்திரம், டேட்ஸ் மட்டும் கேட்டுக்கோங்கனு சொன்னார். எனக்கு ரொம்பவே ஆச்சர்யமாக இருந்தது. சொல்லப்போனால், அது கனவு மாதிரிதான் இருந்தது." எனக் கூறி முடித்துக் கொண்டார்.
பேச தொடங்கிய நடிகை ஷீலா, ``சிறகடிக்க ஆசை 500 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகுது. இந்த வரவேற்பு எனக்கு மகிழ்ச்சியை கொடுக்குது. நான் இதுக்கு முன்னாடி சீரியல்கள்ல நடிச்சிருக்கேன். ஆனால் இந்த தொடர்தான் என்னை வெளில தெரிய வச்சிருக்கு. இந்தவொரு விஷயத்தை என்னை பார்க்கிற பலரும் என்கிட்ட சொல்றாங்க. இந்த கதாபாத்திரத்தை எனக்குக் கொடுத்த இயக்குநருக்குத்தான் நன்றி சொல்லணும். இப்போகூட நான் வெளில போகும்போது பலரும், `ஏன் முத்துவை திட்டுறீங்க'னுதான் கேட்கிறாங்க. அப்படி மக்கள்கிட்ட என்னுடைய கதாபாத்திரம் முழுமையாக பரிச்சயமாகியிருக்கு." என்றார்.
முழுப் பேட்டியைக் காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்!