ஃபகத் ஃபாசில், ஆலியா பட்... இன்னும் பலர்! ஏடிஎச்டி என்பது என்ன? காரணங்களும் தீர...
BB Tamil 8: பெண்களுக்கு ஆண்கள் அணி கொடுக்கும் டாஸ்க்; எதிர்க்கும் ஆனந்தி; ஆதரிக்கும் சவுந்தர்யா
பிக் பாஸ் 8-ன் 40 வது நாளுக்கான புரோமோ வெளியாகி இருக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஸ்கூல் டாஸ்க் நடந்துகொண்டிருக்கிறது. இந்த டாஸ்க் தொடங்கியதிலிருந்தே போட்டியாளர்களுக்குள் பிரச்னைதான். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் ஒரு புதிய பிரச்னை ஆரம்பமாகி இருக்கிறது. இன்றைய புரோமோவில், ஆண்கள் சமைக்கும்போது பெண்கள் இடுப்பில் கை வைத்து நிற்க வேண்டும் என்று ஆண்கள் அணி பெண்களுக்கு ஒரு புதிய டாஸ்க் கொடுக்கிறார்கள்.
பெண்கள் அணியில் ஆனந்தி இந்த டாஸ்கை பண்ண முடியாது என்று உறுதியாக கூறுகிறார். ஆனால் 'எங்களுக்கே கஷ்டமா இல்ல, நாங்களே ஒத்துக்கிறோம். ஆனந்திக்கு என்ன பிரச்னை' என ஜாக்குலினிடம் சொல்லும் சவுந்தர்யா இந்த டாஸ்க்கிற்கு ஒத்துக்கொள்கிறார். இதனால் பெண்கள் அணிக்குள்ளேயே மோதல்கள் ஏற்படுகிறது.