Super Singer Junior 10: நாளை சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 ஆரம்பம்; நடுவர்கள் யார் தெரியுமா?
சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 நிகழ்ச்சி நாளை (நவம்பர் 16) தொடங்கவிருக்கிறது.
2006 முதல் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் பலரும் தற்போது இசைத் துறையில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல முன்னணி இசையமைப்பாளர்களின் ஃபேவரைட் பாடகர்களாகவும் அவர்கள் வலம் வருகிறார்.
அந்த வகையில் சூப்பர் சிங்கர் ஜூனியரின் 10-வது சீசனில் போட்டியாளர்கள் பலரும் உற்சாகத்துடன் களமிறங்கவுள்ளனர். ஆர்வத்துடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் சிறுவர்களின் நெகிழ்ச்சியான கதைகளைப் பற்றிய ப்ரோமைவை ஏற்கெனவே வெளியிட்டிருந்தனர். இம்மாதம் 16ஆம் தேதி (நாளை) முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகவிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் நடுவர்களின் பங்கு முக்கியமானதாக இருக்கும். இதற்கு முந்தைய சீசன்களில் நடுவர்கள் நிகழ்த்திய காமெடி எலமென்ட்டுகளெல்லாம் இப்போதும் சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பார்க்க முடிகிறது. பின்னணி பாடகர்களான கே.எஸ். சித்ரா மற்றும் மனோவுடன் இந்த சீசனில் இசையமைப்பாளர் டி. இமானும் நடுவராகக் களமிறங்குகிறார். முந்தைய சீசன்களில் நிகழ்ச்சியைக் கலகலப்பாகக் கொண்டு சென்ற மா.கா.பா-வும் ப்ரியாங்காவும் மீண்டும் தொகுப்பாளராக இந்த சீசனில் களமிறங்குகிறார்கள்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...