செய்திகள் :

இந்திய டி20 அணியில் மீண்டும் இடம்பிடிப்பதே எனது இலக்கு: கே.எல்.ராகுல்

post image

டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிப்பதே தனது இலக்கு என இந்திய அணியின் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி வீரர்களில் ஒருவரான கே.எல்.ராகுல் சில மாதங்களாக தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரது ஃபார்ம் மீதான விமர்சனங்களும் எழுந்தன. இருப்பினும், கே.எல்.ராகுல் சிறந்த வீரர் எனவும், இந்திய அணி நிர்வாகம் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளது எனவும் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும் பயிற்சியாளர் கௌதம் கம்பீரும் ராகுலுக்கு ஆதரவாக பேசினர்.

இதையும் படிக்க:டி20 போட்டிகளில் அதிவேக 10,000 ரன்கள்: மேக்ஸ்வெல் புதிய சாதனை!

பார்டர் - கவாஸ்கர் தொடருக்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரில் இடம்பெற்றுள்ள கே.எல்.ராகுல், இந்திய அணியினருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவரது ஃபார்ம் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த டெஸ்ட் தொடர் அவருக்கு கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

டி20 அணியில் இடம்பிடிப்பதே இலக்கு

பார்டர் - கவாஸ்கர் தொடருக்காக இந்திய அணி வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டுள்ள கே.எல்.ராகுல், டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிப்பதே தனது இலக்கு என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிப்பதே எனது இலக்கு. அனைத்து வடிவிலான போட்டிகளுக்குமான வீரராக இருப்பதையே எப்போதும் விரும்புகிறேன். பல ஆண்டுகளாக இந்திய அணிக்காக அனைத்து வடிவிலான போட்டிகளிலும் விளையாடியுள்ளேன்.

இதையும் படிக்க: பயிற்சி ஆட்டத்தில் ராகுலுக்கு காயம்! கோலி காயத்தால் ஸ்கேன் செய்ய சென்றாரா?

இந்திய அணிக்காக அனைத்து வடிவிலான போட்டிகளிலும் விளையாடுவதை இன்னும் விரும்புகிறேன். சில காலமாக டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பெறாமலிருக்கிறேன். ஒரு வீரராக நான் எங்கு இருக்கிறேன் என்பது எனக்குத் தெரியும். நான் மீண்டும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணிக்கு திரும்ப வேண்டும். மீண்டும் டி20 போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற, வருகிற ஐபிஎல் தொடர் எனக்கு உதவியாக இருக்கும் என்றார்.

கடந்த ஆண்டு டிசம்பரில் செஞ்சூரியனில் தென்னப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் கே.எல்.ராகுல் கடைசியாக சதம் அடித்திருந்தார். அதன் பின், 9 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள அவர், இரண்டு அரைசதங்களை மட்டுமே எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவை வெல்ல உதவிய நியூசி. வீரருக்கு அணியில் இடமில்லை!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல காரணமாக இருந்த நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர் அஜாஸ் படேல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அணியில் சேர்க்கப்படவில்லை.நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப... மேலும் பார்க்க

தொடக்கமும் முடிவும் இங்கிலாந்துடன்..! ஓய்வு பெறுவது ஏன்? டிம் சௌதி பேட்டி!

நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதி (35) இங்கிலாந்து உடனான டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நியூசிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால... மேலும் பார்க்க

பயிற்சி ஆட்டத்தில் ராகுலுக்கு காயம்! கோலி காயத்தால் ஸ்கேன் செய்ய சென்றாரா?

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் போட்டி வரும் நவ.22ஆம் தேதி பெர்த் ஆடுகளத்தில் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு இந்தியா ஏ அணியுடன் இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. ஆர... மேலும் பார்க்க

ரஞ்சி கோப்பை: 10 விக்கெட்டுகள் வீழ்த்தி ஹரியானா வீரர் சாதனை!

ரஞ்சி கோப்பையில் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி ஹரியானா வீரர் அன்ஷுல் காம்போஜ் சாதனை படைத்துள்ளார்.டி20 தொடரிலிருந்து இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் விலகல்!ரஞ்சி கோப்பையில் கேரளத்துக்கு எ... மேலும் பார்க்க

டி20 தொடரிலிருந்து இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் விலகல்!

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லி காயம் காரணமாக மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான தொடரிலிருந்து விலகுகிறார். முதல் டி20 போட்டியில் காயம் காரணமாக ரீஸ் டாப்லி அவதிப்பட்டார். அதன் காரணமாக 2,3ஆவது போ... மேலும் பார்க்க

டி20 போட்டிகளில் அதிவேக 10,000 ரன்கள்: மேக்ஸ்வெல் புதிய சாதனை!

அனைத்துவிதமான, டி20 போட்டிகளையும் சேர்த்து அதிவேகமாக 10,000 ரன்கள் அடித்து கிளென் மேக்ஸ்வெல் புதிய சாதனை படைத்துள்ளார்.ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரரான மேக்ஸ்வெல், இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல், ... மேலும் பார்க்க