டி20 தொடரிலிருந்து இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் விலகல்!
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லி காயம் காரணமாக மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான தொடரிலிருந்து விலகுகிறார்.
முதல் டி20 போட்டியில் காயம் காரணமாக ரீஸ் டாப்லி அவதிப்பட்டார். அதன் காரணமாக 2,3ஆவது போட்டிகளில் விளையாடவில்லை.
முதல் போட்டியில் ரீஸ் டாபிலி ஆடுகளத்தின் உபகரணங்களை உடைத்தாதால் அவராதம் விதிக்கப்பட்டது. ஐசிசியின் லெவல் 1 விதிகளை மீறியதால் 15 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டது. மேலும் ஒரு டீ மெரிட் புள்ளி வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
3ஆவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது.
இங்கிலாந்து அணி 19.2 ஓவர்களில் 149 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் தொடரையும் வென்றது.
இதன் மூலம்இங்கிலாந்து அணி மே.இ.தீ. உடனான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என வென்றுள்ளது. மீதமுள்ள 2 போட்டிகளிலும் ரீஸ் டாப்லி விளையாடமாட்டார் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கூறியதாவது:
மே.இ.தீ. உடனான மீதமுள்ள டி20 போட்டிகளிலிருந்து காயம் காரணமாக ரீஸ் டாப்லி விலகுகிறார். செயிண்ட் லூசியாவுக்கு கிளம்பிவிட்டார் எனக் கூறியுள்ளது.