செய்திகள் :

டேஹ்ராடூன் கோர விபத்து: விருந்து, அதிவேகம், நொறுங்கிய கார்: 6 பேர் பலி

post image

டிரக்டேஹ்ராடூனில், விருந்துக்குச் சென்று திரும்பியவர்களின் இரவுப் பயணம் மிகக் கொடூரமான விபத்தில் முடிந்துள்ளது. இதில் காரில் வந்த 6 இளம் உயிர்கள் பறிபோனது.

அதிகவேகத்தில் வந்த எம்யுவி கார், சாலையில் கண்டெய்னர் லாரி மீது மோதியதில், ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். டேஹ்ராடூனைச் சேர்ந்த பெண்கள உள்பட 5 பேரும், ஹிமாசலைச் சேர்ந்த ஒருவரும் இந்த விபத்தில் பலியாகினர்.

இந்த விபத்தில் ஒரே ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருந்தாலும், அவரால் விபத்து குறித்து எதையும் நினைவுகூற முடியவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சித்தேஷ் என்பவர் அளித்த விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு இளைஞர்கள் ஊர் திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது. இந்த விபத்தில், கண்டெய்னர் லாரி ஓட்டுநர் மீது எந்த தவறும் இல்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

காரின் ஓட்டுநர், உரிமையாளர் யாருமே இப்போது உயிரோடு இல்லை, விபத்தில் இறந்துவிட்டார்கள் என்பதால், இறந்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய முடியாது என்பதால், இந்த வழக்கில் சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

மிகவும் புத்தம் புதிதான எம்யுவி கார், இன்னும் வாகன எண் பலகைக் கூட பொருத்தப்படாமல், இந்த விபத்தில் சிக்கி உருகுலைந்துபோயிருக்கிறது.

விபத்தில் பிளந்துபோன கார்

சாலையில், மிக அதிக வேகத்தில் கார் வந்துகொண்டிருந்த நிலையில், கண்டெய்னர் லாரி ஓட்டுநர் சாலையைக் குறுக்காக கடந்த போது, காரின் ஓட்டுநரால், காரின் வேகத்தைக் குறைக்க முடியாமல் இந்த விபத்து நேரிட்டிருப்பதாக்வும், இந்த விபத்தில், கார் உருகுலைந்துபோயிருப்பதே, அதன் வேகத்தை உணர்த்துவதாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சுங்கச் சாவடியைக் கடந்து வந்த கார், சற்று நேரத்தில் அதிவேகமெடுத்து சென்றுகொண்டிருக்கும் போது சாலையின் குறுக்கே வந்த கண்டெய்னர் லாரி மீது மோதி, கார் பெரும்பாலும் லாரியின் கீழ் பகுதிக்குள் சென்றுவிடுகிறது. இந்த கார் விபத்தில் சிக்கும் சிசிடிசி காட்சிகளும் வெளியாகியுள்ளது.

இந்த விபத்தின் தாக்கம் கொடூரம்..

காரின் மேல் பகுதி கிழிந்து, காருக்குள் இருந்த இரண்டு பயணிகளின் தலை துண்டானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் சிக்கிய காரை வெளியே எடுத்தபோது, அது என்ன விதமான வாகனம் என்பதைக் கூட அடையாளம் காண முடியாத அளவுக்குச் சிதைந்திருந்தது.

டிரக்கில் ஒட்டியிருக்கும் காரின் மிச்சம்

முன்கூட்டியே எச்சரிக்கை

மிக மோசமான வேகத்தில் கார் ஒன்று செல்வதாக, சாலையோர உணவக உரிமையாளர் ஒருவர் காவல்துறைக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், அவசரகால எண்களை தொடர்பு கொண்டும் நடவடிக்கை எடுக்காத நிலையில், காலையில்தான் அந்த கார் விபத்தில் சிக்கியது குறித்து அறிந்ததாகக் கூறியிருக்கிறார்.

காரை முந்தினாரா? கண்டெய்னரை முந்தினாரா?

முதற்கட்ட தகவலில், ஒரு காரை முந்திச் செல்ல அதிக வேகம் எடுத்ததால் இந்த விபத்து நேரிட்டதாகக் கூறப்பட்டாலும், கண்டெய்னர் சாலையை கடக்கும் முன்பு காரை ஓட்டிச்சென்றுவிடலாம் என்று தவறாகக் கணித்ததே விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

700 கிலோ போதைப்பொருளுடன் பிடிபட்ட ஈரானியப் படகு! 8 பேர் கைது

குஜராத்தில் நடுக்கடலில் 700 கிலோ போதைப்பொருளுடன் ஈரான் நாட்டைச் சேர்ந்த படகு பிடிபட்டது.போதைப்பொருள் கடத்தலில், 700 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருள்களை ஏற்றிச் சென்ற ஈரானியப் படகு குஜராத்தின் போர்பந... மேலும் பார்க்க

ஹரியாணாவில் 1500 கிலோ எடையில் எருமை.. உலர் பழங்கள், 20 முட்டை உணவு!

ஹரியாணா மாநிலத்தில் உள்ள ஒரு எருமை 1500 கிலோ எடையில் இருக்கிறதாம். நாள்தோறும் இதற்கு உலர் பழங்கள், 20 முட்டைகள் வழங்கப்படுகிறது.இந்தியா முழுவதும் நடைபெற்று வரும் வேளாண்துறை கண்காட்சியில் பல்வேறு வகையா... மேலும் பார்க்க

எட்டாம் வகுப்பில் ஃபெயில்... அறுவை சிகிச்சை நிபுணராக வலம்வந்த போலி மருத்துவர்!

எட்டாம் வகுப்பில் தோல்வியடைந்தவர் போலி அறுவை சிகிச்சை நிபுணராக வலம்வந்த நிலையில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.ஒடிஸா மாநிலம் பெர்ஹம்பூர் மாவட்டத்தில் கிருஷ்ணா மூல(பைல்ஸ்) மருத்துவமனையை நடத்தி வருபவ... மேலும் பார்க்க

தேர்தலில் போட்டியிடும் வயதை 21 ஆகக் குறைக்க வேண்டும்! - தெலங்கானா முதல்வர்

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வயதை 21 ஆகக் குறைக்க வேண்டும் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார். தெலங்கானாவில் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும்பொருட்டு குழந்தைகள் பங்கே... மேலும் பார்க்க

தீவைக்கும் முன் கொடூரமாக துன்புறுத்தப்பட்ட மணிப்பூர் பெண்: உடல் கூறாய்வு அறிக்கை

மணிப்பூரில், கடந்த வாரம், மூன்று குழந்தைகளுக்கு தாயான 31 வயது பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிருடன் தீ வைத்து எரிக்கப்படுவதற்கு முன்பு, கொடூரமாக துன்புறுத்தப்பட்டிருப்பதாக உடல் கூறாய்வு ... மேலும் பார்க்க

தில்லியில் 3-வது நாளாக 'கடுமை' பிரிவில் காற்றின் தரம்!

தில்லியில் தொடர்ந்து 3-வது நாளாக காற்றின் தரம் 'கடுமை' பிரிவில் உள்ளது. தில்லியில் நிகழாண்டு தீபாவளிக்குப் பிறகு காற்றின் தரம் 'மிகவும் மோசம்' பிரிவுக்குச் சென்றது. இதனால் காற்று மாசுத் தடுப்பு நடவடிக... மேலும் பார்க்க