Newzealand: மசோதாவைக் கிழித்தெறிந்த மாவோரி இன எம்.பி; பழங்குடிப் பாடல் பாடி போரா...
தேர்தலில் போட்டியிடும் வயதை 21 ஆகக் குறைக்க வேண்டும்! - தெலங்கானா முதல்வர்
சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வயதை 21 ஆகக் குறைக்க வேண்டும் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார்.
தெலங்கானாவில் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும்பொருட்டு குழந்தைகள் பங்கேற்ற மாதிரி சட்டப்பேரவை நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்காக எஸ்சிஇஆர்டி வளாகத்தில் போலி சட்டப்பேரவை அமைப்பு உருவாக்கப்பட்டது.
இதில் சட்டப்பேரவையில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
மாதிரி பேரவையில் மாணவர்களிடையே உரையாற்றிய முதல்வர் ரேவந்த் ரெட்டி, சட்டப்பேரவை செயல்பாட்டில் இளைஞர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதையும் படிக்க | சட்டத்திருத்த மசோதாவை கிழித்து கடும் எதிர்ப்பு! நாடாளுமன்றத்தை அதிரவைத்த எம்பி!
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளின் கேள்விகள் குறித்த முக்கியத்துவத்தையும் பேரவைத் தலைவரின் செயல்பாடுகள் குறித்த விளக்கத்தையும் அளித்தார். சட்டப்பேரவை அமர்வு ஒழுங்காகவும் பயனுள்ளதாகவும் இருப்பதில் பேரவைத் தலைவரின் பங்கு முக்கியமானது என்றார்.
வரலாற்றில் மாற்றத்தை ஏற்படுத்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வயதைக் குறைக்க வேண்டும். அதன்படி தற்போதுள்ள 25 வயதிலிருந்து அதனை 21 ஆகக் குறைக்க வேண்டும், இது ஆட்சி நிர்வாகத்தில் இளைஞர்களின் பங்களிப்புக்கு உதவும் என்றார்.
மேலும் குழந்தைகள் மாதிரி பேரவையை உருவாக்கிய அமைப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன் இது இளைய தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும் என்றார்.
இறுதியாக, மாணவர்களின் ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் பாராட்டிய முதல்வர், அரசியல் விழிப்புணர்வும் ஈடுபாடும் கொண்ட தலைமுறையை உருவாக்க இதுபோன்ற திட்டங்கள் உதவுவதாகக் குறிப்பிட்டார்.