செய்திகள் :

`அதானி வீட்டுக்குச் சென்றது உண்மைதான், ஆனால்...!' - அஜித் பவாரின் குற்றச்சாட்டு குறித்து சரத் பவார்!

post image

கடந்த 2019ம் ஆண்டு மகாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஆட்சியமைக்க எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜ.க மற்றும் சிவசேனா இடையே முதல்வர் பதவி தொடர்பாகக் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஆட்சியமைப்பதில் தாமதம் ஏற்பட்டது.

இதையடுத்து, பா.ஜ.க உடன் சேர்ந்து ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தியது என்று துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்திருக்கும் கருத்து, சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. பா.ஜ.க கூட்டணி ஆட்சியமைப்பது தொடர்பாக தொழிலதிபர் கெளதம் அதானியின் டெல்லி வீட்டில் பேச்சுவார்த்தை நடந்ததாகவும், அதில் சரத் பவாரும் கலந்து கொண்டதாக அஜித் பவார் தெரிவித்து இருந்தார். அஜித் பவாரின் கருத்து குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவார் அளித்துள்ள பேட்டியில், ''டெல்லியில் அதானி வீட்டிற்கு சென்றது உண்மைதான். அதானி தனது வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதில் பங்கேற்பதற்காகத்தான் அவரது வீட்டிற்கு சென்றேன்.

அங்கு அரசியல் தொடர்பான ஆலோசனைக்காக செல்லவில்லை'' என்று தெரிவித்துள்ளார். ஆனால் டெல்லி சந்திப்பு குறித்து இணைய தளம் ஒன்று வெளியிட்டுள்ள தகவலில், டெல்லியில் அதானி வீட்டில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சரத் பவாரும், அவரது கட்சியின் மூத்த நிர்வாகிகளும் கலந்து கொண்டுள்ளனர். அவர்களிடம் பா.ஜ.க தலைவர்கள் உங்களது கட்சியை சேர்ந்த பல தலைவர்கள் மீது ஊழல் வழக்கு இருக்கிறது. நீங்கள் பா.ஜ.க கூட்டணி அரசில் சேர்ந்தால் அந்த வழக்குகளை எல்லாம் தள்ளுபடி செய்துவிடுவதாக உறுதியளித்துள்ளனர். ஆனால் பா.ஜ.க தலைவர்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவார்களா என்ற சந்தேகத்தில் சரத் பவார் அவர்களின் திட்டத்திற்கு ஒத்துக்கொள்ளாமல் பின் வாங்கிவிட்டதாக சரத் பவார் சொன்னதாக அந்த இணையதளம் தெரிவித்துள்ளது.

ஆனால் சரத் பவார் விருந்துக்கு சென்றதாக இப்போது மாற்றி பேசுவதாக அஜித் பவார் கட்சி தலைவர்கள் விமர்த்தித்துள்ளனர். இவ்விவகாரத்தில் சரத் பவார் தங்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக இப்பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்த துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் குற்றம்சாட்டி இருக்கிறார். அதோடு இக்கூட்டத்தில் அதானியே பங்கேற்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ''டெல்லியில் நடந்த பொதுக்கூட்டம் அதானி வீட்டில் நடக்கவில்லை. அதோடு அக்கூட்டத்தில் அதானியும் பங்கேற்கவில்லை. பா.ஜ.க தலைவர்கள், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் மட்டும்தான் அதில் பங்கேற்றோம். இக்கூட்டம் பல மணி நேரம் நடந்தது.

அதில் அமைச்சரவை, இலாகா ஒதுக்கீடு, மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து பேசப்பட்டது. அனைத்தும் முடிவு செய்யப்பட்ட நிலையில் சரத் பவார் திடீரென தனது முடிவை மாற்றிக்கொண்டார். இது உண்மையில் சரத் பவார் எங்களுக்கு செய்த துரோகமாகும். ஆட்சியமைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் தான் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த பரிந்துரைக்கப்பட்டது. அதுவும் சரத் பவாரிடம் கேட்டுவிட்டுத்தான் செய்தோம்'' என்றார்.

2023ம் ஆண்டு பா.ஜ.க கூட்டணி அரசில் பங்கேற்க முடிவு செய்தபோது தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் அதற்கு ஆதரவு தெரிவித்தார்கள் என்று துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாசிக்கில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் அவர் மேலும் கூறுகையில், ``மாநிலத்தின் நலனை கருத்தில் கொண்டு பா.ஜ.க கூட்டணி அரசில் சேர முடிவு செய்தபோது அதற்கு ஒப்புதல் தெரிவித்துவித்து தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கையெழுத்தும் போட்டுக்கொடுத்தார்கள்.

தற்போது சரத் பவார் கட்சியில் இருக்கும் ஜெயந்த் பாட்டீல் கூட கையெழுத்து போட்டுக்கொடுத்தார்'' என்று குறிப்பிட்டுள்ளார். அஜித் பவார் தேர்தல் நேரத்தில் அதானி பிரச்னையை கிளப்பியது பா.ஜ.கவிற்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே மகாராஷ்டிரா கட்சிகளை பா.ஜ.க உடைத்தது என்ற விமர்சனம் இருக்கிறது. இப்போது ஆட்சியமைப்பு பேச்சுவார்த்தையில் அதானியும் பங்கேற்றார் என்ற செய்தியை அஜித் பவார் வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருப்பது பா.ஜ.க-விற்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

Telangana: திருநங்கை தன்னார்வலர்களை போக்குவரத்து காவலில் ஈடுபடுத்த திட்டம்; ரேவந்த் ரெட்டி அறிவிப்பு

ஹைதராபாத் மாநகரில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய காவல்துறையினருக்கு உதவும் வகையில் தன்னார்வமுள்ள திருநங்கைகளை பணியமர்த்த தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.திருநங்கை தன்னார்வளர்களு... மேலும் பார்க்க

Srilanka: 'மறுமலர்ச்சியை ஆரம்பிக்க தோள் கொடுத்ததற்கு நன்றி'- அநுர குமார திசாநாயக்க அபார வெற்றி

கடந்த செப்டம்பர் 21-ம் தேதி இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற்றது.அதில், தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி சார்பில் போட்டியிட்ட அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்று அதிபரானார். அனுராவின் தேசிய மக்கள்... மேலும் பார்க்க

”பொய்க்கு மேக்கப் போடுகிறார் எடப்பாடி பழனிசாமி; அது அம்பலமாகி விடும்”- சாடிய முதல்வர் ஸ்டாலின்!

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். இதற்காக நேற்று இரவே ஜெயங்கொண்டம் வந்த ஸ்டாலின் அங்குள்ள விருந்தினர் மாளிகையில் தங்கினார். இதற்காக விருந்தினர் ம... மேலும் பார்க்க

Elon Musk: 'கடினமான வேலை; எதிரிகள் அதிகம்; ஆனால், சம்பளம் இல்லை' - எலான் மஸ்க்கின் புதிய வேலை என்ன?

அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னுடைய தேர்தல் பிரசாரத்தில் 'அமெரிக்காவைக் காப்பாற்றுங்கள்' என்ற முன்னெடுப்பை எடுத்து மக்களிடம் வாக்கு சேகரித்தார்.இதன் ஒரு பகுதியாக, தற்போது 'அரசு செயல்திறன் (Department of ... மேலும் பார்க்க

எலான் மஸ்க்கின் ‘X’ தில்லாலங்கடி... அதிபர் தேர்தலில் ஏற்படுத்திய தாக்கமும் விளைவும் என்ன?

அமெரிக்க தேர்தலும் எலான் மஸ்கும்!நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ‘எக்ஸ்’ சமூக வலைதளமும், குறிப்பாக அதன் உரிமையாளர் எலான் மஸ்க்கும் முக்கியப் பங்கு வகித்ததை யாராலும் மறுக்க முடியாது. இந்தக் கா... மேலும் பார்க்க

Mumbai: "தாராவி நிலத்தை அதானிக்குக் கொடுக்க நினைக்கிறார் மோடி" - ராகுல் பேச்சின் பின்னணி என்ன?

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் முடிய இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில், பிரசாரம் சூடுபிடித்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, பா.ஜ.க தலைவர் ஜெ.பி.நட்டா, ராகுல் காந்... மேலும் பார்க்க