செய்திகள் :

ஹிந்துக்களுக்கு மட்டன், பீர்! மன்னிப்பு கோரிய பிரிட்டன் பிரதமர் அலுவலகம்!

post image

தீபாவளி பண்டிகை விருந்தில் ஹிந்துக்களுக்கு மட்டன், பீர் வழங்கப்பட்டதற்கு பிரிட்டன் பிரதமர் அலுவலகம் மன்னிப்பு கோரியது.

கடந்த மாதம் தீபாவளியையொட்டி, பிரிட்டனில் அக்டோபர் 29 ஆம் தேதியில் பிரதமர் விருந்து மாளிகையில் (10, டௌனிங் ஸ்ட்ரீட்) பிரிட்டிஷ் ஹிந்துக்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்தில் ஹிந்துத்துவ தலைவர்கள் உள்பட அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், ஹிந்து பண்டிகை விருந்தில் மதுவும் மாமிசமும் அளிக்கப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நடந்து 2 வாரங்கள் ஆனபோதிலும், இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் எந்தவிதமான பதிலும் அளிக்காமல் இருந்தார்.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகை விருந்தில் ஹிந்துக்களுக்கு மது, மாமிசம் வழங்கியதற்கு பிரதமர் அலுவலகம் வெள்ளிக்கிழமையில் (நவ. 15) மன்னிப்பு கோரியுள்ளது. இனிமேல், இதுபோன்ற தவறுகள் நடக்காது என்று உறுதியளித்துள்ளனர்.

இதையும் படிக்க:டேராடூன் கோர விபத்து: விருந்து, அதிவேகம், நொறுங்கிய கார்! சட்ட நிபுணர்களை நாடும் காவல்துறை!!

தீபாவளி விருந்து இரவு உணவு அட்டவணையில் மட்டன், பீர், ஒயின் முதலானவை இருந்ததாக சில பிரிட்டிஷ் ஹிந்துக்கள் கூறினர். ஹிந்துக்கள் பங்குபெறும் ஹிந்து பண்டிகையில் மதுவும் மாமிசமும் வழங்குவது ஏமாற்றம் அளிப்பதாக பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, விருந்தில் மது, மாமிசம் அளிக்கப்பட்டதற்கு பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை, முக்கிய பிரிட்டிஷ் ஹிந்து பண்டிதரான சதீஷ் கே ஷர்மாவும் குற்றம் சாட்டினார். அவர் கூறியதாவது, ``மது, மாமிசத்தால் புனிதக் கொண்டாட்டமே பாதித்து விட்டது. இந்த சம்பவம் கவனக்குறைவு என்றால் சோகமளிக்கக் கூடியதாக உள்ளது; வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டிருந்தால், அது இன்னும் அதிகப்படியான சோகத்தை ஏற்படுத்தும்.

ஏனெனில், விருந்தில் மது, மாமிசம் அளிப்பதன்மூலம் பிரிட்டிஷ் ஹிந்துக்களுக்கு பிரதமர் ஏதோ சொல்ல விரும்புகிறார் என்றுதான் தோன்றும்’’ என்று தெரிவித்தார்.

தயவுசெய்து செத்து விடு! கேள்வி கேட்ட மாணவரை சாகச் சொன்ன ஏஐ!

அமெரிக்காவில் ஜெமினி ஏஐ-யிடம் கேள்வி கேட்ட மாணவரை இறந்து விடுமாறு, ஏஐ பதிலளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவில் 29 வயதான கல்லூரி மாணவர் ஒருவர், தனது வீட்டுப்பாடத்திற்காக ஏஐ (செயல் ... மேலும் பார்க்க

மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஸ்பெயின் பிரதமர் இரங்கல்

ஸ்பெயின் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஸ்பெயின் பிரதமர் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.ஸ்பெயினில் சரகோஸாவில் உள்ள முதியோர் இல்லத்தில் வெள்ளிக்கிழமை (நவ. 15) அதிகாலையி... மேலும் பார்க்க

ஸ்பெயினில் முதியோர் இல்லத்தில் தீ விபத்து: 10 பேர் பலி

ஸ்பெயினில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பலியாகினர். ஸ்பெயினின் சராகோசாவில் உள்ள முதியோர் இல்லத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 10 பேர் பலி... மேலும் பார்க்க

சட்டத்திருத்த மசோதாவை கிழித்து கடும் எதிர்ப்பு! நாடாளுமன்றத்தை அதிரவைத்த இளம் எம்பி!

நியூசிலாந்தில் மக்களுக்கு எதிரான சட்டத்திருத்த மசோதாவின் நகலை கிழித்து இளம் எம்பி முழக்கம் எழுப்பிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் பழங்குடியின மவோரி மக்களுக்கு எதிர... மேலும் பார்க்க

இலங்கை தேர்தல்: அநுரகுமார திசாநாயக அமோக வெற்றி!

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களை கடந்ததால் அநுரகுமார திசாநாயகவின் தேசிய மக்கள் சக்தியின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று இ... மேலும் பார்க்க

நியூயார்க்கில் ஈரான் ஐ.நா. தூதரை ரகசியமாக சந்தித்த எலான் மஸ்க்!

நியூயார்க்கில் ஈரானின் ஐ.நா. தூதரை ஸ்பேஸ்எக்ஸ், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ரகசியமாக சந்தித்து அமெரிக்கா- ஈரான் இடையிலான பதற்றத்தை தணிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதித்தாக தகவல்கள் வெளியாகியுள்ள... மேலும் பார்க்க