செய்திகள் :

சட்டத்திருத்த மசோதாவை கிழித்து கடும் எதிர்ப்பு! நாடாளுமன்றத்தை அதிரவைத்த இளம் எம்பி!

post image

நியூசிலாந்தில் மக்களுக்கு எதிரான சட்டத்திருத்த மசோதாவின் நகலை கிழித்து இளம் எம்பி முழக்கம் எழுப்பிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் பழங்குடியின மவோரி மக்களுக்கு எதிரான சட்டத்திருத்த மசோதாவின் நகலை கிழித்து இளம் எம்பி 22 வயதான ஹனா ராவ்ஹ்தி கரேரிக்கி மைபி கிளார்க் கடும் எதிர்ப்பு தெரிவித்து பாரம்பரிய ஹக்கா முழக்கத்தை எழுப்பிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஹனா ராவ்ஹ்தி கரேரிக்கி கடும் எதிர்ப்பு தெரிவித்து ஹக்கா முழக்கத்தில் ஈடுபட்டதுடன் மற்ற உறுப்பினர்களும் அவருடன் கலந்து கொண்டு முழக்கம் எழுப்பினர். இதனால், அவைத் தலைவர் ஜெர்ரி பிரவுன்லி அமர்வை தற்காலிகமாக நிறுத்தி ஒத்திவைத்தார்.

டி20 போட்டிகளில் அதிவேக 10,000 ரன்கள்: மேக்ஸ்வெல் புதிய சாதனை!

1840 ஆம் ஆண்டு அரசுக்கும், மவோரி பழங்குடியின மக்களுக்கும் இடையே போடப்பட்ட வைடாங்கி ஒப்பந்தத்தின்படி, அவர்கள் பயன்படுத்திய நிலங்களை தாங்களே வைத்துகொள்ளலாம் என்றும், ஆங்கிலேயே அரசுக்கு ஒப்படைக்காமல் தங்கள் நலன்களுக்காக பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்திருத்தம் நியூசிலாந்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் பொருந்தும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹனா ராவ்ஹ்தி கரேரிக்கி மைபி கிளார்க் மற்றும் அவரது தந்தை இருவரும் தே பதி மவோரி தொகுதியில் போட்டியிட்டனர். ஆனால், இளம் வேட்பாளர் என்ற முறையில் ஹனா ராவ்ஹ்தி கரேரிக்கி மைபி கிளார்க் மக்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நியூயார்க்கில் ஐ.நா.வுக்கான ஈரான் தூதரை ரகசியமாக சந்தித்த எலான் மஸ்க்!

மவோரி மக்களின் உரிமைகளைப் பறிப்பதாக ஹனா ராவ்ஹ்தி பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸனின் பழமைவாத ஆட்சியைக் கடுமையாக விமர்சித்தார்.

இந்தச் சர்ச்சைக்குரிய மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கு குறைவான ஆதரவு இருப்பதால் ஒரு சட்டமாக மாற்றுவதற்கு வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே.இ.தீவுகளை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து!

இலங்கை தேர்தல்: அநுரகுமார திசாநாயக அமோக வெற்றி!

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களை கடந்ததால் அநுரகுமார திசாநாயகவின் தேசிய மக்கள் சக்தியின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று இ... மேலும் பார்க்க

நியூயார்க்கில் ஈரான் ஐ.நா. தூதரை ரகசியமாக சந்தித்த எலான் மஸ்க்!

நியூயார்க்கில் ஈரானின் ஐ.நா. தூதரை ஸ்பேஸ்எக்ஸ், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ரகசியமாக சந்தித்து அமெரிக்கா- ஈரான் இடையிலான பதற்றத்தை தணிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதித்தாக தகவல்கள் வெளியாகியுள்ள... மேலும் பார்க்க

இலங்கை தேர்தல்: வெற்றியை நோக்கி அநுரகுமார திசாநாயக!

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் 97 இடங்களில் முன்னிலை பெற்று தேசிய மக்கள் சக்தி கூட்டணி வெற்றியின் விளிம்பில் உள்ளது.கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று இலங்கையின் முதல் இடதுசார... மேலும் பார்க்க

இலங்கை நாடாளுமன்றத் தோ்தல்: அதிபா் அநுரகுமார திசாநாயக கட்சி முன்னிலை!

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்ற நிலையில், ஆளும் தேசிய மக்கள் சக்தி கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.அதிபா் அநுரகுமார திசாநாயகவின் ஜாதிக ஜன பலவேகய கட்சி காலை 8 மணி நிலவரப்... மேலும் பார்க்க

இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: சிரியாவில் 15 போ் உயிரிழப்பு

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் சிரியாவில் 15 போ் உயிரிழந்தனா்; 16 போ் காயமடைந்தனா். சிரியா தலைநகா் டமாஸ்கஸில் உள்ள மாசே மற்றும் குத்சயா பகுதிகளில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில்,... மேலும் பார்க்க

ஈரானில் ஐ.நா. அணுசக்தி கண்காணிப்புத் தலைவா்

மத்தியக் கிழக்குப் பகுதியில் தீவிர போா் நடைபெற்றுவரும் சூழலிலும், ஐ.நா.வின் அணுசக்திக் கண்காணிப்பு அமைப்பின் (ஐஏஇஏ) தலைவா் ரஃபேல் கிராஸி ஈரானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளாா். அந்த நாட்டின் அணுசக்த... மேலும் பார்க்க