அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்துக்கு புதிய திட்டங்கள்: முதல்வர் அறிவிப்பு!
கொடிக் கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து லாரி ஓட்டுநர் பலி; ராமநாதபுரத்தில் அலட்சியத்தால் தொடரும் பலிகள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசியல் நிகழ்வுகள், திருமண விழாக்களில் பங்கேற்க வரும் அரசியல் தலைவர்களை வரவேற்பதற்காகச் சாலையின் இரு புறங்களிலும் அரசியல் கட்சிகள் தங்களின் கட்சிக் கொடிக் கம்பங்களை நடுகின்றனர். மேலும் வரம்பில்லா அளவுகளில் பிளக்ஸ் போர்டுகளும் அமைக்கின்றனர். இவ்வாறு நடப்படும் இரும்பு கொடிக் கம்பங்கள், பிளக்ஸ் போர்டுகள் போதிய ஆழத்திலோ, பாதுகாப்புடனோ நடப்படாமல் பெயரளவிற்கு நட்டு வைக்கப்படுகின்றன. இவ்வாறு நடப்படும் கம்பங்கள் மற்றும் பிளக்ஸ் போர்டுகள் காற்றில் சாய்ந்தோ அல்லது விழா முடிந்து அகற்றும்போதோ நடக்கும் விபத்துகளால் உயிரிழப்பு ஏற்படும் நிலை உருவாகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் கடந்த 15 தினங்களுக்குள் இது போன்ற காரணங்களால் 3 உயிரிழப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த மாத இறுதியில் கமுதியில் முன்னாள் எம்.எல்.ஏ காதர்பாட்சா என்ற வெள்ளைச்சாமியின் நினைவு நாளை முன்னிட்டு பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டிருந்தது. நிகழ்வுக்குப் பின் அதனை அகற்றியபோது அருகிலிருந்த டிரான்ஸ்பார்மரில் போர்டின் இரும்பு கம்பி சாய்ந்து மின்சாரம் பாய்ந்தது. இதில் போர்டு அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி செல்வக்குமார் என்பவர் உயிரிழந்தார்.
இதே போல் கடந்த மாத இறுதியில் பசும்பொன் தேவர் குருபூஜை விழாவிற்காகப் பரமக்குடியில் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டிருந்தன. அக்.30 அன்று இரவு இந்த போர்டினை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த காவல் சார்பு ஆய்வாளர் சரவணன் என்பவர் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில், நேற்று (நவம்பர் 14) ராமேஸ்வரம் வேர்க்கோடு பகுதியில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ முத்துராமலிங்கம் பங்கேற்றார். எம்.எல்.ஏ-வை வரவேற்பதற்காக அப்பகுதிகளில் சாலையின் இரு புறங்களிலும் தி.மு.க கொடிக் கம்பங்கள் மற்றும் ஏராளமான பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டிருந்தன. விழா முடிந்த பின்னரும் இவை அகற்றப்படவில்லை.
இந்நிலையில் வேர்க்கோடு பகுதியில் உள்ள மீன் கம்பெனி ஒன்றிற்குச் சொந்தமான லாரியை நிறுத்துவதற்கு அதன் ஓட்டுநர் கோபி என்பவர் முயன்றுள்ளார். அப்போது அங்கு நடப்பட்டிருந்த தி.மு.க கொடி கம்பியின் மீது லாரியின் கதவு மோதியது. இதனால் அருகிலிருந்த மின்சார டிரான்ஸ்பார் மீது கொடிக்கம்பி சாயவே அக்கம்பி வழியாக லாரி ஓட்டுநர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் மாந்தோப்பு பகுதியைச் சேர்ந்த கோபி (31) பரிதாபமாக உயிரிழந்தார். திருமணம் நடந்து 5 மாதங்களே ஆன நிலையில் லாரி ஓட்டுநர் கோபி மின்சாரம் பாய்ந்து பலியானது சோகத்தை ஏற்படுத்தியது.
சாலை ஓரங்களில் கட்சிக் கொடிகள், பிளக்ஸ் போர்டுகள் அமைக்க பல்வேறு விதிமுறைகள் இருக்கின்றன. ஆனால் அதனை அமைப்பவர்கள் அந்த விதிகள் எதையும் மதிப்பதில்லை. மேலும், இவற்றை முறைப்படுத்த வேண்டிய காவல் துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தினர் என அரசு தரப்பில் எவரும் கண்டு கொள்வதில்லை. போலீஸார் இது போன்ற வரம்பு மீறல்களைத் தடுக்க முன்வருவதில்லை. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் அடுத்தடுத்து 3 உயிர்கள் பரிபோயிள்ளன. இனியாவது காவல்துறை அதிகாரிகள் இதில் அக்கறை காட்ட வேண்டும் எனப் பொதுமக்கள் கருதுகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://bit.ly/47zomWY