கட்சிக்காரர்கள் ஒவ்வொருவரையும் கண்காணித்து வருகிறேன்: அமைச்சர் துரைமுருகன்
kanguva: "ரசிகர்கள் தலைவலியுடன் வெளிவருவதா...?" - ஆஸ்கர் விருதாளர் ரசூல் பூக்குட்டி சொல்வதென்ன?
சிறுத்தை சிவா இயக்கத்தில் முதன்முறையாக சூர்யா நடித்து தியேட்டரில் வெளியாகியிருக்கும் படம் கங்குவா. பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்தப் படத்தை, ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. 2022-ம் ஆண்டு ஆரம்பித்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு காலதாமதமாக முடிவடைந்தாலும், இதன் மீது ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்புகள் இருந்தன.
தமிழகம் மட்டுமன்றி பத்து மொழிகளில் பான்-இந்தியளவில் வெளியான கங்குவா படத்திற்கு எதிர்பார்த்த அளவு விமர்சனங்கள் கிடைக்கவில்லை. பின்னணி இசை மற்றும் ஒலி உருவாக்கம் குறித்து எனப் பல்வேறு எதிர்மறையான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன.
2009-ம் ஆண்டு வெளியான 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தின் சிறந்த சவுண்ட் மிக்ஸ்காக ஆஸ்கர் விருதை வென்றவர் சவுண்ட் இன்ஜினியர், ரெசூல் பூக்குட்டி.
இவர் கங்குவா படத்தின் இசை குறித்த விமர்சனங்களைப் பார்த்துவிட்டு, தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,``என்னுடைய ரீ-ரிக்கார்டிங் மிக்ஸர் நண்பர் ஒருவர் எனக்கு இந்த பதிவை அனுப்பினார். இது போன்ற பிரபலமான படங்களில் ஒலி பற்றிய விமர்சனத்தைப் பார்ப்பது மனவருத்தமாக இருக்கிறது. எங்கள் கலைத்திறன் இது போன்ற வேலைகளில் சிக்கிக்கொள்வது யார் குற்றம்? ஒலி பொறியாளரின் குற்றமா? கடைசி நேரத்தில் பதற்றத்தில் கூடுதல் விஷயங்களைச் சேர்க்க சொல்பவர்களின் குற்றமா? ஒலி கலைஞர்கள் நாம் இப்போது இதைப் பற்றி கேள்வி எழுப்ப வேண்டும். படம் பார்க்க வருபவர்கள் தலை வலியுடன் திரும்பச் சென்றால், எப்படி அவர்களுக்கு மீண்டும் அப்படம் பார்க்க வேண்டும் என்று தோன்றும்? ரிப்பீட் வேல்யூ இருக்காது” என மன வருத்தத்துடன் பதிவிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...