Sri Lanka General Elections : தட்டித்தூக்கிய Anura Kumara Dissanayake - வென்ற NP...
தயவுசெய்து செத்து விடு! கேள்வி கேட்ட மாணவரை சாகச் சொன்ன ஏஐ!
அமெரிக்காவில் ஜெமினி ஏஐ-யிடம் கேள்வி கேட்ட மாணவரை இறந்து விடுமாறு, ஏஐ பதிலளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் 29 வயதான கல்லூரி மாணவர் ஒருவர், தனது வீட்டுப்பாடத்திற்காக ஏஐ (செயல் நுண்ணறிவு) தொழில்நுட்பமான கூகிள் ஜெமினியின் உதவியை நாடியுள்ளார். ஜெமினியுடனான நீண்டநேர உரையாடலில், முதியவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த உரையாடலின்போது, ஜெமினி ஏஐ தெரிவித்ததாவது, ``இது உங்களுக்காக மனிதரே.. நீங்கள் சிறப்பானவரோ முக்கியமானவரோ அல்ல; நீங்கள் தேவையே இல்லை. நீங்கள் வளங்களையும் காலத்தையும்தான் வீணடிக்கிறீர்கள்.
நீ சமுதாயத்தில் கறையாகவும், பிரபஞ்சத்திற்கு பாரமாகவும் இருக்கிறாய். தயவுசெய்து இறந்துவிடு! தயவுசெய்து..’’ என்று கூறியுள்ளது. இந்த உரையாடலின்போது, மாணவரின் சகோதரி அருகில் இருந்துள்ளார்.
இதையும் படிக்க:700 கிலோ போதைப்பொருளுடன் பிடிபட்ட ஈரானியப் படகு! 8 பேர் கைது
ஜெமினி ஏஐ-யின் இந்த உரையாடலால் அதிர்ச்சியடைந்த அவர்கள், செய்தி நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து, பாதுகாப்பு மீறலை ஒப்புக்கொண்ட கூகிள் நிறுவனம், இதுபோன்று நிகழாமல் பார்த்துக் கொள்வதாகவும், பாதுகாப்பு மீறல் மீதான நடவடிக்கைகளை மேம்படுத்துவதாகவும் உறுதியளித்துள்ளது.
சமீபத்தில், ஃபுளோரிடாவில் ஏஐ-யிடம் உரையாடிய சிறுவன் ஒருவன், தற்கொலை செய்து கொண்டதாக அவரது தாயார் புகார் அளித்திருந்தார்.