மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஸ்பெயின் பிரதமர் இரங்கல்
ஸ்பெயின் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஸ்பெயின் பிரதமர் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஸ்பெயினில் சரகோஸாவில் உள்ள முதியோர் இல்லத்தில் வெள்ளிக்கிழமை (நவ. 15) அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டவுடன் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
நீண்ட நேரப் போராட்டத்துக்கு பின்னர் தீ அணைக்கப்பட்டும், மருத்துவமனைக்குள் இருந்த 10 பேர் பலியாகினர்.
இதனையடுத்து, தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஸ்பெயின் பிரதமர் உள்பட பலரும் இரங்கலும், அவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதலும் தெரிவித்தனர். மேலும், அரசு நிகழ்ச்சிகளும் இன்று ஒருநாள் ரத்து செய்யப்பட்டன.
சமீபத்தில் ஸ்பெயினில் உள்ள வலென்சியாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சுமார் 200 பேர் வரையில் பலியாகியிருந்தனர்; ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். இந்த நிலையில், சரகோஸாவில் ஏற்பட்ட தீ விபத்து மேலும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
இதையும் படிக்க:700 கிலோ போதைப்பொருளுடன் பிடிபட்ட ஈரானியப் படகு! 8 பேர் கைது