செய்திகள் :

இந்திய அணிக்கு வலிமை சேர்க்க அவர் வந்துவிட்டார்... யாரைக் கூறுகிறார் ரவி சாஸ்திரி?

post image

இந்திய அணிக்கு வலிமை சேர்க்க மூத்த வீரர் வந்துவிட்டதாக இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் தொடர் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது. பார்டர் - கவாஸ்கர் தொடருக்கான இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் தனது பயிற்சியை ஏற்கனவே தொடங்கிவிட்டது.

மீண்டும் முகமது ஷமி

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமி கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரில் விளையாடினார். அந்தத் தொடரின்போது அவருக்கு காயம் ஏற்பட, அதன் பின் அவர் இந்திய அணியில் இடம்பெறவில்லை.

இதையும் படிக்க: இந்தியாவை வெல்ல உதவிய நியூசி. வீரருக்கு அணியில் இடமில்லை!

இந்த நிலையில், நீண்ட நாள்களுக்குப் பிறகு முகமது ஷமி முழுவீச்சில் பந்துவீசத் தொடங்கியுள்ளார். பெங்கால் அணிக்காக ரஞ்சி கோப்பைத் தொடரில் விளையாடிய முகமது ஷமி, மத்திய பிரதேசத்துக்கு எதிரான போட்டியில் 19 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

காயம் காரணமாக கடந்த ஓராண்டாக அணியில் இடம்பெறாமலிருந்த முகமது ஷமி, பார்டர் - கவாஸ்கர் தொடருக்கான இந்திய அணியுடன் விரைவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரவி சாஸ்திரி கூறியதென்ன?

முகமது ஷமி முழுவீச்சில் பந்துவீசத் தொடங்கியுள்ள நிலையில், பார்டர் - கவாஸ்கர் தொடரில் அவர் இந்திய அணியுடன் இணைவது தொடர்பாக அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

முகமது ஷமி (கோப்புப் படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பார்டர் - கவாஸ்கர் தொடரில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பக்க பலமாக பந்துவீச்சில் ஆதரவு தேவைப்படுகிறது. முகமது ஷமி காயத்திலிருந்து மீண்டு மீண்டும் முழுவீச்சில் பந்துவீசத் தொடங்கியுள்ளார். அவர் முழு உடல் தகுதியுடன் பார்டர் - கவாஸ்கர் தொடருக்கான இந்திய அணியுன் இணைவது அணிக்கு பலம் சேர்ப்பதாக அமையும் என்றார்.

இதையும் படிக்க: இந்திய டி20 அணியில் மீண்டும் இடம்பிடிப்பதே எனது இலக்கு: கே.எல்.ராகுல்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா என இரு அணிகளுக்குமே இந்த டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியமானதாகும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், இந்திய அணி இரண்டாவது இடத்திலும் உள்ளன.

ஆஸ்திரேலிய மண்ணில் கடந்த 2018-2019 ஆம் ஆண்டு இந்திய அணி முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்றபோது, முகமது ஷமி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அந்த தொடரில் 4 போட்டிகளில் அவர் 16 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதுவரை இந்திய அணிக்காக 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள முகமது ஷமி 229 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடைசி டி20: இந்தியா பேட்டிங்; தொடரைக் கைப்பற்றுமா?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டி20 போட்டி ஜோகன்ஸ்பெர... மேலும் பார்க்க

ஐபிஎல் மெகா ஏலத்தில் கலந்துகொள்ளும் வீரர்கள் பட்டியல் வெளியீடு!

ஐபிஎல் மெகா ஏலத்தில் கலந்துகொள்ளும் வீரர்களின் பட்டியலை ஐபிஎல் நிர்வாகம் இன்று (நவம்பர் 15) வெளியிட்டுள்ளது.ஐபிஎல் மெகா ஏலம் வருகிற நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் ... மேலும் பார்க்க

ஜஸ்பிரித் பும்ராவை பின்னுக்குத் தள்ளி அர்ஷ்தீப் சிங் புதிய சாதனை!

சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகள் கைப்பற்றி வேகப் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் சாதனை படைத்துள்ளார்.இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட... மேலும் பார்க்க

இந்தியாவை வெல்ல உதவிய நியூசி. வீரருக்கு அணியில் இடமில்லை!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல காரணமாக இருந்த நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர் அஜாஸ் படேல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அணியில் சேர்க்கப்படவில்லை.நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப... மேலும் பார்க்க

இந்திய டி20 அணியில் மீண்டும் இடம்பிடிப்பதே எனது இலக்கு: கே.எல்.ராகுல்

டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிப்பதே தனது இலக்கு என இந்திய அணியின் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.இந்திய அணி வீரர்களில் ஒருவரான கே.எல்.ராகுல் சில மாதங்களாக தடுமாற்றமான ஆட்டத்தை வெ... மேலும் பார்க்க

தொடக்கமும் முடிவும் இங்கிலாந்துடன்..! ஓய்வு பெறுவது ஏன்? டிம் சௌதி பேட்டி!

நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதி (35) இங்கிலாந்து உடனான டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நியூசிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால... மேலும் பார்க்க