சென்னை மேம்பாலத்தில் சிவகார்த்திகேயனின் புதிய படத்தின் படப்பிடிப்பு
தொடக்கமும் முடிவும் இங்கிலாந்துடன்..! ஓய்வு பெறுவது ஏன்? டிம் சௌதி பேட்டி!
நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதி (35) இங்கிலாந்து உடனான டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
நியூசிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால் அதில் சௌதி பங்கேற்பார் எனத் தெரிவித்துள்ளார்.
முதன்முதலாக டெஸ்ட் போட்டியில் மார்ச்.2008இல் இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகமானார் டிம் சௌதி. முதல் போட்டியில் 5 விக்கெட்டுகள் 77 ரன்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது.
டிம் சௌதி மொத்தமாக இதுவரை 104 டெஸ்ட் போட்டிகளில் 385 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
இளைஞர்களுக்கு வழி
ஓய்வு முடிவினை அறிவித்தது ஏன் எனக் கூறியுள்ளார் டிம் சௌதி. பேட்டியில் அவர் கூறியதென்ன:
கடைசியாக எனக்கு பிடித்தமான 3 ஆடுகளங்களில் விளையாடுவது மகிழ்ச்சி. இது கடினமான முடிவென்றாலும் இதுதான் சரியான முடிவு. எங்களது அணியிலும் புதிய இளம் வீரர்கள் விளையாடவிருக்கிறார்கள். அவர்களுடன் விளையாடுவது மகிழ்ச்சி. அத்துடன் சில விஷயங்களை அவர்களுக்கு கற்றுத்தர முடிந்தால் கூடுதல் மகிழ்ச்சி.
நிச்சயமாக அவர்களும் எனக்கு சில விஷயங்களை கற்றுத்தரக் கூடும். இது இளைஞர்களுக்கான நேரம். அணியை முன்னோக்கி கொண்டுச் செல்வது அவர்களின் கடமை. அடுத்ததாக நமக்கு முன்பாக என்ன இருக்கிறது எனப் பார்க்க வேண்டும்.
எங்களது திடமான டெஸ்ட் கிரிக்கெட்டின் சில துண்டுகளாக கடைசி 12 மாதங்கள் சுவாரசியாக சென்றுகொண்டிருக்கின்றன.
தொடக்கமும் முடிவும் இங்கிலாந்துடன்
இங்கிலாந்துடன் மிகப்பெரிய தொடராக இருக்கும். இவர்களுக்கு எதிராகத்தான் விளையாடத் தொடங்கினேன். அப்போதுதான் கனவு தொடங்கியது. 19 வயது இளைஞராக ஓய்வறைக்கு செல்லும்போது அங்கு டேனியல் வெட்டோரி, பிளம்மிங், மெக்குல்லம் இருப்பதை நினைத்துப் பார்க்கிறேன். அது மிகவும் முக்கியமான வாரம். நாங்கள் நினைத்ததுபோல் வெற்றி கிடைக்காவிட்டாலும் சில விக்கெட்டுகள் ரன்கள் எடுத்துவிட்டு நமது நாயகர்கள் இருக்கும் ஓய்வறைக்கு சென்றது சிறப்பான நிகழ்வு.
நியூசிலாந்து அணிக்காக நான் அதிகம் விளையாடிய ஆடுகளம் ஹாமில்டனில்தான். அதேபோல் சிறப்பான ஆடுகளங்களாக ஓவலும் பேசின் ஆடுகளங்களும் இருக்கும். சிறந்த எதிரணியுடன் விளையாடவிருக்கிறேன். அவர்களுக்கு பயிற்சியாளராக இருப்பவர் யாரென தெரியும். என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் மெக்கல்லமுக்கு மிகப்பெரிய பங்கிருக்கிறது. அவர் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பரும்கூட என்றார்.
இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகமாகி அவர்களுடனேயே கடைசி போட்டியையும் விளையாடவிருக்கிறார்.