செய்திகள் :

அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்துக்கு புதிய திட்டங்கள்: முதல்வர் அறிவிப்பு!

post image

அரியலூர் மற்றும் மாவட்டத்துக்கான புதிய திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ. 15) அரியலூரில் நடைபெற்ற அரசு விழாவில், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் நதியனூர் கூட்டுக் குடிநீர்த் திட்டம், வெற்றியூர் கூட்டுக் குடிநீர்த் திட்டம், ஜெயங்கொண்டம் மற்றும் உடையார்பாளையம் நகரங்களுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள், 3 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அவைகள் மேம்படுத்தப்படும். 

அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 645 கிராம குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம், 42 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டு, தடையின்றி போதிய குடிநீர் வழங்கப்படும்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையத்திற்கு 4 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்டப்படும்.

அரியலூர் வட்டம், வாரணவாசி கிராமத்தில் மருதையாற்றின் குறுக்கே 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டப்படும். 

அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் துணை சுகாதார நிலையங்களில், வாடகைக் கட்டடத்தில் இயங்கி வரும் 35 துணை சுகாதார நிலையங்களுக்கு 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சொந்தக் கட்டடங்கள் கட்டப்படும்.

கால்நடைப் பராமரிப்புத் துறைக்கு ஒருங்கிணைந்த அலுவலக வளாகம் 3 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும். 

இதையும் படிக்க: பிரசவத்துக்குப் பின் தாயும் சேயும் பலி! அலைக்கழித்த அரசு மருத்துவர்களால் துயரம்!!

பெரம்பலூர் மாவட்டத்தில், கூடலூர் ஜமீன்பேரையூர் சாலையில், மருதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, சுத்தியிருக்கும் கிராம மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். இவர்களுக்குப் பயனளிக்கும் வகையில், 24 கோடி ரூபாய் செலவில் மருதையாற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம் அமைக்கப்படும்.

வெங்காய உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் புதிய வெங்காய விற்பனை மையம் அமைக்கப்படும்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உயர்தர கல்விப் பயிற்சிகளை வழங்கும் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, பெரம்பலூரில் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியை மேம்படுத்தும் வகையில், 56 கோடி ரூபாய் செலவில் புதிய வகுப்பறை மற்றும் விடுதிக் கட்டடங்கள் கட்டப்படும். 

அதுமட்டுமல்ல, இன்று காலை அமைச்சர் மற்றும் சகோதரர் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவனுடன், அரியலூர் வழக்கறிஞர் சங்கத்தினர் என்னை இன்று காலை சந்தித்தபோது, அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் ஒரே இடத்தில் செயல்படக்கூடிய வகையில் ஒரு நீதிமன்ற வளாகம் தேவை என கோரிக்கை விடுத்தார்கள். இதனை ஏற்று அரியலூரில் ரூ. 101.50 கோடி செலவில் ஒரு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்று அவர் தெரிவித்தார்.

அடுத்த 3 மணி நேரத்துக்கு தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு ... மேலும் பார்க்க

சென்னையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பின்!

சென்னை பட்டினப்பாக்கம் நொச்சிக்குப்பம் கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பினை வனத்துறையினர் இன்று மீட்டனர்.சென்னை பட்டினப்பாக்கம் நொச்சிக்குப்பம் கடற்கரையில் மீனவர்கள் வழக்கம்போல் காலையில் ப... மேலும் பார்க்க

சைபர் மோசடியில் ரூ. 10 கோடியை இழந்த முதியவர்!

தில்லி ரோஹினி பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற 70 வயது பொறியாளர் சைபர் கிரைம் மோசடி மூலம் ரூ. 10 கோடியே 30 லட்சம் ஏமாற்றப்பட்டுள்ளார்.காவல் துறை அதிகாரிகளின் தகவலின்படி, பாதிக்கப்பட்ட ஓய்வுபெற்ற பொறியாளர்... மேலும் பார்க்க

எங்கெல்லாம் இன்று கனமழை பெய்யும்? - வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் இன்று(நவ. 15) 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:மன்னார் வளைகுடா மற்று... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடைகளில் ரசீது வழங்கும் முறை தொடக்கம்!

காஞ்சிபுரம், செங்கல்பட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுப்பாட்டில்களுக்கு டிஜிட்டல் முறையில் ரசீது வழங்கும் நடைமுறை இன்றுமுதல்(நவ. 15) தொடங்கப்பட்டுள்ளது.தமிழகத்திலுள்ள டாஸ்மாக் கடைகளில் முறைகேடாகக் கூட... மேலும் பார்க்க

குபேரா படத்தின் கிளிம்ஸ் விடியோ அறிவிப்பு!

குபேரா படத்தின் கிளிம்ஸ் விடியோ குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.நடிகர் தனுஷின் 51-வது படத்தை சேகர் கமூலா இயக்கி வருகிறார். இதில் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்திலும் நாயகியாக ராஷ்மிகாவும் ந... மேலும் பார்க்க