சட்டத்திருத்த மசோதாவை கிழித்து கடும் எதிர்ப்பு! நாடாளுமன்றத்தை அதிரவைத்த இளம் எம...
நியூயார்க்கில் ஈரான் ஐ.நா. தூதரை ரகசியமாக சந்தித்த எலான் மஸ்க்!
நியூயார்க்கில் ஈரானின் ஐ.நா. தூதரை ஸ்பேஸ்எக்ஸ், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ரகசியமாக சந்தித்து அமெரிக்கா- ஈரான் இடையிலான பதற்றத்தை தணிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதித்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எலான் மஸ்க் மற்றும் ஈரான் தூதர் அமீர் சயீத் இரவானி ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு நியூயார்க்கில் உள்ள ஒரு ரகசிய இடத்தில் நடைபெற்றதாகவும், இருவரும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரானிய அதிகாரிகள், அவர்கள் இருவரும் இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றத்தைக் குறைப்பதில் கவனம் செலுத்தியது பற்றி விவாதித்ததாக தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள டிரம்புடன் நடந்த தொலைபேசி வாயிலான உரையாடலின் போது டெஸ்லா மற்றும் எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான மஸ்க்கும் உடன் இருந்ததாக தகவல்கள் வெளியாகின. அதன்பின்னர், டொனால்ட் டிரம்ப் அரசின் செயல்திறன் நிறுவனத்தின் இணை இயக்குநராக எலான் மஸ்க்கை நியமித்தார்.